Categories: சினிமா

சிவகார்த்திகேயன் ரஜினி படத்தில் நடிக்கிறாரா?

வெளியிட்டது
சிவகார்த்திகேயன் ரஜினி படத்தில் நடிக்கிறாரா? 1

ரஜினியின் அடுத்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து முடிந்தது. ரஜினிகாந்த் இந்த படத்தில் கிராம கதை பாணியில் நடிக்கிறார். இதில் குஷ்பு, மீனா ஆகியோரும் நடித்த காட்சிகளும் ரஜினியின் அறிமுக பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படத்தில் சித்தார்த்தும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், சிவகார்த்திகேயனும் ரஜினி படத்தில் சேர்ந்து நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. ஆனால் அந்த கூற்றை படக்குழுவினர் யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. போலியான டுவிட்டர் கணக்கில்தான் அந்த விவரம் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதை விடவில்லை.

ரஜினி படத்தில் எப்படியாவது சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் ஹேஷ்டேக்கை ஒன்றை உருவாக்கி டிரென்டிங் செய்து வருகிறார்கள். டெலிவி‌ஷனில் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகரான இவர் படத்திலும் ரஜினி ரசிகராக நடித்துள்ளார். மேலும், இவர் ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அது சிறிய வேடமாக இருந்தாலும் சரி உடனே சம்மதித்து விடுவேன் என்று பல மேடைகளில் கூறி வந்தார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்