Categories: சினிமா

இந்தியன் 2 வில் ஒரு சண்டைக் காட்சியின் பட்ஜெட் மட்டுமே இவ்வளவு கோடியா??

வெளியிட்டது
இந்தியன் 2 வில் ஒரு சண்டைக் காட்சியின் பட்ஜெட் மட்டுமே இவ்வளவு கோடியா?? 1

கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்ததன் காரணமாக இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சற்று தாமதமாக நடந்தது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் தனது முழு கவனத்தையும் இந்தியன் 2 பக்கம் திருப்பி படத்திற்காக 2 மாதம் முழுவதும் ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னரே 25% படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான போபாலில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு ரூ.40 கோடி வரை செலவில், சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த செய்தி அறிந்து நெட்டிசன்கள், ‘என்னது ஒரு சண்டை காட்சிக்கு மட்டுமே 40 கோடியா… என்று வாய்பிளந்துள்ளனர். மேலும் பீட்டர் ஹெய்ன் இந்தச் சண்டைக் காட்சியை வடிவமைக்கவுள்ளார் எனவும் இந்த சண்டைக் காட்சிக்கு மட்டும் 2,000 துணைக் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது

இயக்குநர் ஷங்கர் அவர்கள் இயக்கி வருகிற இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மயிலாப்பூர், ஸ்ரீபெரும்புதூர், சாலிகிராமம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன.மேலும் இப்படம் வரும் 2021ல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்