காதோடு தான் நான் பாடுவேன்.! LR ஈஸ்வரி முன்பே அவரது பாடலை பாடிய கானா இளவரசி இசைவாணி.!

வெளியிட்டது

பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் எல் ஆர் ஈஸ்வரி முன்பு அவர் பாடிய பாடலை பாடி காட்டி எல்.ஆர் ஈஸ்வரியையே ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் கானா இசைவாணி. வடசென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் இசைவாணி. ஆண்கள் மட்டுமே கானா பாடல்கள் பாடிக்கொண்டிருந்த இடத்தில் பெண்களாலும் கானா பாடல்கள் பாட முடியும் என்று இந்த துறையில் இறங்கி சாதித்து காட்டியிருக்கிறார். இவர் முதன்முதலாக “பெரிய கறி” என்கிற பாடலை பாடியதன் மூலமாக பிரபலமானார். இந்த பிரபலத்தை கொண்டு இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இசைவாணி அந்த நிகழ்ச்சியிலும் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் மக்கள் இவருக்கு குறைவான வாக்குகளை அளித்து வெளியேற்றி விட்டனர். இருந்த போதும் மனம் தளராமல் தொடர்ந்து மேடை கச்சேரிகளில் பாடி வருகிறார் இசைவாணி. இவருக்கு சில படங்களில் பாடும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காதோடு தான் நான் பாடுவேன்.! LR ஈஸ்வரி முன்பே அவரது பாடலை பாடிய கானா இளவரசி இசைவாணி.! 1
2020 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய கானா திறமையை வெளிப்படுத்தியதால் உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இசைவாணியை தேர்வு செய்து அவரை பெருமைப்படுத்தி இருந்தது பிபிசி நிறுவனம். பிக்பாஸில் இருந்த போது இவர் திருமணம் ஆகவில்லை என்ற செய்தியை மறைத்து விட்டார் என்று பலரும் இவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர். ஆனால் இசைவாணிக்கு ஏற்கனவே கானா பாடகர் ஒருவருடன் திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகியிருந்தது. பிக்பாஸில் இருந்து இசைவாணி வெளியே வந்த பின்னர் இந்த விஷயம் பூதாகரமானது. ஆனால் அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறார் இசைவாணி. குறிப்பாக மேடை கச்சேரிகளில பாடி பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட புத்தாண்டில் புது கார் வாங்கி இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் இசைவாணி.


இந்த நிலையில் இன்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் பிரபல பழம பெரும் பின்னணி பாடகியான எல் ஆர் ஈஸ்வரியின் “காதோடு தான் நான் பாடுவேன்” என்கிற பாடலை அவரது முன்பே பாடி இருக்கிறார். இசைவாணியின் திறமையை பார்த்த எல்ஆர் ஈஸ்வரி அவர் பாடுவதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் இசைவாணிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இரண்டு பெரும் பாடகிகள் ஒரே மேடையில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றும் இசைவாணியின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்