Categories: சினிமா

கணக்கில் வராத பணத்தில் சினிமா தயாரித்த பெரிய புள்ளிகள்? ஐடி ரெய்டில் வசமாக மாட்டிய தயாரிப்பாளர்கள்

வெளியிட்டது

கணக்கில் வராத பணத்தை திரைப்படங்களில் முதலீடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தயாரிப்பாளர்கள் பலர் வீடு மற்றும் அலுவலங்களில் இன்று வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பலரின் வீடுகளில் சில முக்கிய ஆவணங்ளும் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கணக்கில் வராத பணத்தை பயன்படுத்தி சினிமாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் இன்று பைனான்சியர் அன்பு செழியன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர் பிரபு, ஞானவேல் ராஜா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் மற்றும் வேலூரை சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் சீனிவாசன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று காலை ஐந்து மணி முதலே வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கணக்கில் வராத பணத்தில் சினிமா தயாரித்த பெரிய புள்ளிகள்? ஐடி ரெய்டில் வசமாக மாட்டிய தயாரிப்பாளர்கள் 1

கலைப்புலி எஸ் தாணு தமிழ் திரையுலகில் மிக முக்கிய தயாரிப்பாளர் ஆவார். இவரின் டி நகர் பிரகாசம் சாலையில் உள்ள அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்களில் பத்துக்கும் மேற்பட்ட வருமானத்துறையினர் வந்தனர். தற்போது அவரின் அலுவலகங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அவரை தொடர்ந்து சினிமா பைனான்சியரான அன்புச் செழியன் கடந்த 2020 ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை கணக்கில் வராத பயணத்தைக் கொண்டு இயக்கியதாக வருமானவரித்துறையினர் அப்போதே சோதனை மேற்கொண்டனர். அன்றைய தினம் 77 கோடி மற்றும் முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றினர். தற்போது மீண்டும் 2022-ல் அவருக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 5 மணிமுதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.ஆர் பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான தி நகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது மட்டுமில்லாமல் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்திலும், வேலூர் எஸ் பிலிம் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் என்பவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமானத் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீனிவாசன் வட ஆற்காடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். தமிழ் திரை உலகின் மிக முக்கியமான தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து வருமானவரித்துறையினர் சோதனை நடந்து வரும் நிலையில், மேலும் பல தயாரிப்பாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பலர் கலக்கத்தில் உள்ளனர். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

Youtube video code embed credits: Malaimurasu TV 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்