பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புது நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்துள்ளார் தாமரை செல்வி. தெருக்கூத்துகளில் பங்கெடுத்து வந்த வர, பின்னர் நாடக கலைஞராகி இப்பொது விஜய் டிவி மூலம் கிடைத்த முகவரி மூலம் சில படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆல்பம் பாடல்கள் படி, நடித்து வந்த ஐக்கி பெர்ரியும் பிக் பாஸ் மூலம் ரசிகர்களால் கவனிக்கபட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இப்போது மீண்டும் ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு வருகிறார். அண்மையில் இவர் எழுதி,பாடி, நடித்துள்ள ராணி என்ற பாடல் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐக்கி பெர்ரியும் தாமரை செல்வியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே நட்பு பாராட்டி வருகின்றார். அவ்வப்போது சந்தித்து பேசும், ஜாலியாக இருக்கும் விடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்கள்.
பாடல் வெற்றி அடைந்ததால் அதே உற்சாகத்தில் தற்போது மீண்டும் அடுத்த ஆல்பத்திற்கு தயாராகி வருகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்ததிலிருந்தே ஐக்கி பெர்ரியும், தாமரையும் நல்ல நட்புறவில் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் எதாவது வீடியோ வெளியிடுவது, ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொள்வது, ஊர் ஊராக சுற்றுவது என இருவருமே சேர்ந்தே இருக்கிறார்கள்.
அந்த வகையில் இப்பொது ஐக்கி பெர்ரி தன்னுடைய இன்ஸ்டா பதிவில் போஸ்ட் ஒன்று போட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையமைத்து வெளியான படம் “டான்”. எஸ்.ஜே.சூர்யா, சூரி, பாலசரவணன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது. அதற்கு முக்கிய காரணம் படத்தில் இடம்பெற்றுள்ள நிறைய காமெடி காட்சிகள். குறிப்பாக கல்லூரி முதல்வரை சந்திக்கும் பொது நடிகர் சிவாவும் சூரியும் பண்ணும் அலப்பறை நிறையவே வரவேற்பை பெற்றது. இப்போது அந்த விடியோவை தான் ரீல்ஸ் செய்து ஐக்கியம், தாமரையும் வெளியிட்டுள்ளார்கள். இது இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Video Courtesy – Viral Videos update