Categories: அரசியல்

8 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற மகள்.! முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடிய ஜெ தீபா.!

வெளியிட்டது

ஜெயலலிதாவின் அண்ணன் மகளாக இருக்கும் ஜெ. தீபா தற்போது தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. தமிழ் மண்ணை கடந்த 30 ஆண்டுகளில் ஆறு முறை ஆட்சி செய்தவர் ஜெ ஜெயலலிதா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

8 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற மகள்.! முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடிய ஜெ தீபா.! 1

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த இவர் கடந்த 2016ம் ஆண்டு காலமானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருடைய அண்ணன் மகள் ஜெ தீபா தமிழ் மக்களுக்கு முதல் முறையாக அறிமுகமானார்.

பார்ப்பதற்கு அப்படியே ஜெயலலிதா போன்றே இருந்த அவர், தனது அத்தையை பார்க்க அனுமதி மறுக்கப் படுகிறது என்று சொல்லி அதிர வைத்திருந்தார். மேலும் இறுதிச்சடங்குகளுக்கு கூட தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கண்ணீர் மல்க பேட்டிகளில் பேசி வைரலானார்.

ஜெயலலிதாவுக்கும் தீபாவிற்கும் 2002ம் ஆண்டு வரை நல்ல உறவு இருந்து வந்தது. அதன் பின்னர் சில காரணங்களால் தீபாவும் ஜெயலலிதாவும் பிரிந்து விட்டனர். தீபாவின் தாயார் புற்றுநோயால் இறந்த போது கூட ஜெயலலிதா வரவில்லை.

மேலும் தீபாவின் கணவர் மாதவன் கிறிஸ்தவர் என்பதால் தீபா ஜெயலலிதாவிற்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தீபா தற்போது போயஸ் கார்டன் இல்லத்தை கைப்பற்றி இருக்கிறார்.

வாரிசு அடிப்படையில் அவருக்கு அந்த வீடு தீபாவுக்கு கிடைத்திருக்கிறது. தீபா 2014ம் ஆண்டு மாதவன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். 08 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை என்று பிறந்திருந்தது. இந்தக் குழந்தைக்கு ‘கார்த்திகா’ என்று பெயர் வைத்திருப்பதாக சமீபத்தில் தீபா அறிவித்திருந்தார்.

தொடர்ந்து தற்போது குழந்தையை முதன்முறையாக காட்டி குழந்தைக்கு அன்ன பிரசன்னம் வழங்கும் நிகழ்ச்சியையும் தீபா நடத்தி இருந்தார். தற்போது குழந்தைக்கு முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் தீபாவின் குழந்தை கார்த்திகாவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Wow Tamizha

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்