“அப்போல்லாம் விஜயே சினிமாவுல இல்ல, நீ என் இவளோ அலப்பறை கொடுக்குற”!! சுப்ரமணியபுர ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெய்யை திட்டி தீர்த்த சசிகுமார்

வெளியிட்டது

"அப்போல்லாம் விஜயே சினிமாவுல இல்ல, நீ என் இவளோ அலப்பறை கொடுக்குற"!! சுப்ரமணியபுர ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெய்யை திட்டி தீர்த்த சசிகுமார் 1

சிலருக்கு சினிமாவில் சிறிய வயதிலேயே கிடைத்து மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைத்த பின்னும், அடுத்தடுத்த அதற்கேற்ப வெற்றி படங்கள் அமையாமல், தடுமாறிப்போவார்கள். சிலருக்கு வெற்றி படங்கள் அமைந்தும், அதன் மூல தன்னை சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருவார்கள். இது சினிமாவிலுள்ள பலருக்கும் பொருந்தும். வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது.

இந்த இரண்டு அடைப்படியிலுமே பொருந்தும் ஒரு நடிகர் என்றால் அது நடிகர் ஜெய் மட்டுமே. முதலில் விஜயுடன் அவருக்கு தம்பியாக “பகவதி” படத்தில் நடித்து இருந்தார். நடிகர் விஜயின் சாயல் நிறைய இருக்கவே அந்த சமயத்தில் இவர் உண்மையில் விஜயின் சொந்தம் எனவே பலரும் நினைத்து வந்தனர். போக போக இவரே விஜய் போலவே மாற துவங்கினர்.

துணை கதாபாத்திரத்தில் தோன்றினாலும், பின்னர் வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான “சென்னை 28” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அதன் பின் இயக்குனர் சசிகுமார் அறிமுகமாகும் “சுப்ரமணியப்பபுரம்”. படம் வெளிவரும் போது அதில் பெரிய நட்சத்திரங்கள் என்றால் ஒன்று ஜெய் மற்றொன்று காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. சசிகுமார், சமுத்திரக்கனி என இப்போதைய பெரிய நடிகர் முகவரி இல்லாமல் ஜெய்யுடைய முகவரியுடன் வெளியான இந்த படம் சக்கை போடு போட்டது.

குறிப்பாக படத்தில் இடம் பெரும் கண்கள் இரண்டால் பாடலும் அதில் ஜெய் செய்யும் mannerism இன்றளவும் ரசிகர்களுக்கு மிகவும் பிரதிசயமான ஒன்றாக, அவளோ பெரிய பேமஸ் அனைத்து. இந்த படத்தின் வெற்றி அவரை அடுத்தடுத்த படங்களில் நாயகனாகியது. ஆனால் பெரிதாக எந்த ஒரு படமும் பெரிய வெற்றியை அடையவில்லை. நடுவில் இவர் நடித்த “எங்கேயும் எப்போதும்” படம் மட்டும் கொஞ்ச நல்ல பெயரையும், வசூலையும் எடுத்தது. மற்ற படி இவரின் அணைத்து படங்களுமே வருவதும் தெரியாமல் தோல்வி படங்களாக அமைந்தது.

இவருக்கு ஒரு தனி ரசி இருக்கிறது. முக்கிய நாயகனாக இல்லாமல் வேறொரு நாயகனுடன் இவர் இணைந்து நடித்தால் படம் நிச்சயம் வெற்றி பெற்று விடுகிறது. அந்த வகையில் “கோவா, ராஜா ராணி, சென்னை 28-2, என பல படங்கள் இவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது. குறிப்பாக வெங்கட் பிரபு ஜெய்யுடன் படம் இணைந்தால் அது நிச்சயம் வெற்றி படமாகவே அமைகிறது.

இப்பொது ஜெய்யும், இயக்குனர் சுந்தர்.சியும் இணைத்து நடித்துள்ள “பட்டாம்பூச்சி” என்ற திரைடபடம் வெளியிட்டிற்காக தயாராகி வருகிறது. அதற்கான ப்ரோமோஷன் வேலைகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த படத்தில் ஜெய் ஒரு கொலையாளியாகவும், சுந்தர்.சி இவரை பிடிக்க வரும் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து வருகிறார்கள். அந்த படத்தின் ப்ரோமொஷனிர்காக ஜெய் தனியார் ரேடியோ சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் பல்வேறு வகையிலான விஷயங்கள் பற்றியும் அவர் பேசியுள்ளார். குறிப்பிட்டு சொல்லும் படி, “சுப்ரமணியபுரம் படம் நடிக்கும் போது, எனக்கு இயல்பாகவே நடிகர் விஜய்யின் mannerism நிறைய வரும். அப்போதெல்லாம் சசிகுமார், “டேய் நாம 80’களின் கதையை படமாக செய்கிறோம், அப்போல்லாம் விஜயே சினிமாவில் இல்லை, நீ ஏன் அதையே பங்கிட்டு இருக்க, என அடிக்கடி திட்டுவார், பகவதி படத்தில் ஒரு 10 நாட்கள் விஜயுடன் பயணித்ததால் அந்த செய்கை எனக்கும் வந்துவிட்டதா? என தெரியவில்லை என கூறியுள்ளார். இந்த வீடியோ இப்பொது வைரலாகி வருகிறது.

Video Courtesy – SuryanFM

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்