Categories: சினிமா

எப்பவும் ஒரு சூப்பர் ஸ்டார் தான்.! யாரும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆச படாதீங்க.! பயில்வான் விமர்சனம்.!

வெளியிட்டது

ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் பல விமர்சனங்கள் கூறிவரும் நிலையில், தற்போது பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனங்களை கூறியிருக்கிறார். முதல் சூப்பர் ஸ்டாரும் அவர்தான் கடைசி சூப்பர் ஸ்டாரும் அவர்தான். இனிமேல் யாரும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படாதீர்கள் என்று சொல்லி அவர் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, வசந்த் ரவி, சிவராஜ் குமார், மோகன்லால், விநாயக் போன்ற பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் ஓய்வு பெற்ற ஜெயிலராகவும் அதே நேரம் குடும்பத் தலைவராகவும் இருக்கிறார் சூப்பர் ஸ்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எப்பவும் ஒரு சூப்பர் ஸ்டார் தான்.! யாரும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆச படாதீங்க.! பயில்வான் விமர்சனம்.! 1

படம் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விமர்சனங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் பயில்வானும் தனது விமர்சனங்களை கூறியிருக்கிறார். கடந்த கால வாழ்க்கையை மறந்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் ரஜினி. அசிஸ்டன்ட் கமிஷனர் ஆக வரும் தனது மகனுக்கு ஷூ பாலிஷ் போடுகிறார். வசந்த் ரவியும் தந்தையைப் போலவே நேர்மையான அதிகாரியாக இருக்கிறார். சிலை கடத்தல் வழக்கில் இருக்கும் வில்லன் விநாயக்கின் ஆளை கைது செய்கிறார். இதனால் கோபம் கொள்ளும் விநாயக் வசந்த் ரவியை கடத்தி கொலை செய்து விடுகிறார். மகனை காணாமல் தேடி அலையும் ரஜினிக்கு வசந்த் ரவி கொலை செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. மேலும் ரஜினியின் குடும்பத்தையும் கொல்ல விநாயக் பல திட்டங்களை தீட்டுகிறார். இதிலிருந்து குடும்பத்தை ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

ஆக்ஷன் காட்சிகளில் ரஜினிகாந்த் பட்டையை கிளப்பி இருக்கிறார். பழைய ரஜினியை பார்த்தது போலவே இருந்தது. நடப்பது, கத்தியால் குத்துவது, சண்டை போடுவது என்று அனைத்திலும் தூள் கிளப்பி இருக்கிறார். தியேட்டர்களில் இந்த காட்சிகளுக்கெல்லாம் கைதட்டல் பறக்கிறது. கொஞ்சம் பாட்ஷா, கொஞ்சம் தங்கப்பதக்கம், கொஞ்சம் விக்ரம் என அனைத்து படங்களையும் சேர்த்து ஜெயிலர் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். இந்த படத்தில் வரும் சில காட்சிகள் இந்த மூன்று படங்களையுமே நினைவுப் படுத்துகிறது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது நெல்சன் சுயமாக சிந்திக்க மாட்டார் என்று தான் தோன்றுகிறது. பேட்டை, அண்ணாத்த படம் நன்றாக போகாததால் ரஜினி நெல்சனை நம்பி ஒரு புது படத்தை கொடுத்தார்.

நெல்சன் ரஜினியின் நம்பிக்கையை பூர்த்தி செய்திருப்பதாகத் தான் கூற வேண்டும். படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ரஜினி தான். 72 வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். சிங்கம் மாதிரி வந்து கர்ஜித்து இருக்கிறார். இனி யாரும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படாதீங்க, முதல் சூப்பர் ஸ்டாரும் அவர் தான், கடைசி சூப்பர் ஸ்டாரும் அவர்தான் என்று விஜயை மறைமுகமாக தாக்கி தனது விமர்சனத்தை நிறைவு செய்தார் பயில்வான் ரங்கநாதன். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Recent Voice

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்