Categories: சினிமா

ஜெயிலர் படத்தில் இருந்து புது வீடியோ ஒன்றை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்திய படக்குழு.!

வெளியிட்டது

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ஜெயிலர் படத்திலிருந்து தற்போது மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் “காவாலா” பாடல் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை விளக்கி தற்போது மேக்கிங் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரஜினி ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகத்திற்கும் சூப்பர் ஸ்டாராக விளங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சுமார் 168 படங்களில் நடித்த முடித்து தற்போது தனது 169 வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தில் இருந்து புது வீடியோ ஒன்றை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்திய படக்குழு.! 1

இந்தப் படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் யோகி பாபு, மோகன் லால், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் முத்துவேல் பாண்டியன் வருகிறார் என்கிற அறிவிப்புடன் இந்த படம் துவங்கப்பட்டது. அதன் பின்னர் எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தமன்னா, ரஜினிகாந்த் ஆகியோர் கேக் வெட்டும் புகைப்படங்களையும் அவர்கள் பகிர்ந்து இருந்தனர். இந்த நிலையில் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான காவலா பாடல் சில நாட்களுக்கு முன்கு வெளியாகி இருந்தது. இந்த பாடலுக்கு தமன்னா குத்தாட்டம் போட்டிருந்தார்.

தற்போது பேஸ்புக்,instagram, youtube என சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் இந்த பாடல் ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த பாடல் எவ்வாறு எடுக்கப்பட்டது என்கிற மேக்கிங் வீடியோவை தற்போது படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கின்றனர். வெளியான சில மணி நேரங்களில் சுமார் ஒரு மில்லியன் பார்வையாளர்களை அந்த வீடியோ நெருங்கி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்