“இனிமே தான் ஆட்டமே ஆரம்பம்”!! நெல்சனுடன் ஜெயிலராக மிரட்டவிருக்கும் ரஜினி!!அதிகாரபூர்வமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக்!!

வெளியிட்டது

தமிழ் திரையுலகின் உச்சம் நடிகர் ரஜினி. 70 வயதை கடந்தும் இன்றளவும் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் முக்கிய நடிகராகவும், ஆசிய அளவில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான “அண்ணாத்தே” படம் வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்றபோதிலும், ரஜினியின் ஸ்டார் இமேஜ் மட்டுமே படம் 200 கோடி வசூலை பெற வைத்தது.

கோலமாவு கோகிலா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்கள் கொடுத்தும் அடுத்து விஜயுடன் “பீஸ்ட்” படம் சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரானதால், அடுத்த படம் இவரை ஓகே செய்தார் ரஜினி. பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே தலைவர் 169 பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

"இனிமே தான் ஆட்டமே ஆரம்பம்"!! நெல்சனுடன் ஜெயிலராக மிரட்டவிருக்கும் ரஜினி!!அதிகாரபூர்வமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக்!! 1

ஆனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விஜயின் “பீஸ்ட்” படம் முதல் காட்சியிலிருந்தே கலவையான விமர்சனங்களை பெறதுடங்கியது. குறிப்பாக நெல்சனின் கதையமைப்பு மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது. ஆனால் முதலுக்கு மோசமில்லை என்றளவில் படம் விஜய்க்காக 250 கோடி வசூலை தாண்டியது.

ஆனால் அப்போதிலிருந்து ரஜினிக்கு குழப்பமாக உள்ளது. படத்தை கை விட்டுவிட்டார் என்றெல்லாம் தினம் ஒரு தகவல் வெளியாகின. நெல்சன் மேல் நம்பிக்கை இல்லாமல் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை திரைக்கதை அமைக்க ரஜினி அழைத்தாகவும் பல்வேறான செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

ஆனால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் எந்த வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்ததும், நெல்சன் அண்மையில் ஒரு விருது விழாவில் “நானே பல பிரச்சனையில மாட்டிகிட்டு இருக்கேன், என்ன விட்டுருங்க” என பேசியதும், படம் கை கைவிடப்பட்டதாகவே நிலைமை நீடித்தது.

ஆனால் இப்பொது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. நெல்சனே படத்தை இயக்குகிறார். படம் அனிருத் இசையமைப்பில், ரஜினி நடிக்க தயாராகவுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு படத்திற்கு “ஜெயிலர்”  என தலைப்பிட்டு படம் விரைவில் துவங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்