பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தேசிய கீதம் என்பதற்கு பதிலாக நாட்டுப் பண் என்று கூறினார். அதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது அது குறித்து அவர் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். தூய தமிழில் பேசும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் பல படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி, இந்த மாதம் பத்தாம் தேதி நிறைவடைந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதில் அவர் தேசிய கீதம் என்பதற்கு பதிலாகஇந்திய ஒன்றிய நாட்டுப்பண் என்று கூறினார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது பலரும் ஜேம்ஸ் வசந்தனை திட்டி தீர்த்தனர். ஜேம்ஸ் வசந்தன் ஒரு கிறிஸ்தவ பாவாடை என்றும் பலர் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலளித்த அவர் தேசிய கீதம் என்று சொல்லாமல் நாட்டுப்பண் என்று தமிழில் சொல்வதற்கு கோபப்படுகிறார்கள் என்றால் அவர்கள் யார் என்று புரிந்து கொள்ளலாம் என்று ஒரு பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த பேச்சுக்கு மீண்டும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அவர் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார் அதில் அவர் குறிப்பிடும்போது, ஏன் இந்திய ஒன்றியம் என்று சொன்னார் என்று ஒரு கூட்டம் விமர்சிக்கிறது. என்னை யாரும் சொல்லச் சொல்லவில்லை. அது என் தேர்வுதான். இந்த ஊடகப் பயணத்தில் எனக்கு நல்ல மொழியை, தகுந்த சொற்களை, சரியான பயன்பாட்டைப் பலரும் சொல்லிக்கொடுத்துதான் என்னை வளர்த்திருக்கிறார்கள். அறிஞர் மட்டுமன்றி சாமானியரும் எனக்குப் பல விதங்களில் கற்றுத் தந்திருக்கின்றனர். வெறுப்போடு படித்த மொழியை இன்று நேசிக்கத் தொடங்கியதும் இவர்களால்தான். அந்த அடிப்படையில் இப்படிப் பல சொற்களை நான் என் பயன்பாட்டில் மாற்றி வந்திருக்கிறேன்/வருகிறேன். நேற்று நான் அப்படி ‘இந்திய ஒன்றியம்’ என்று சொன்னது அந்த அட்டையில் எழுதி வைக்கப்படவில்லை, திட்டமிடப்படவில்லை. ஒலிவாங்கியின் முன் நின்றபோது என் மனதில் திருத்தி அமைக்கப்பட்ட அந்தச் சொல் தானாக வந்து விழுந்தது. ஏனெனில், இதைக்குறித்து நான் ஏற்கனவே சில கட்டுரைகளையும், சட்ட விளக்கங்களையும் வாசித்திருந்தேன். சில அரசியல் விமர்சகர்களிடமும் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தேன்.
அதன் சாராம்சம் – Union of India or Indian Union may refer to: The country of India. The Government of India, whose legal name is ‘Union of India’ as per Article 300 of the Indian constitution. மத்திய அமைச்சர்களை இங்லிஷில் Union Minister என்றும் அந்த அமைச்சரவையை Union Council of Ministers என்றும், அவர்கள் ஆண்டுதோறும் வழங்குகிற வரவு-செலவு திட்டத்தை Union Budget என்றுதான் எல்லா இங்லிஷ் பத்திரிகைகளும் காலங்காலமாக எழுதிவருகின்றன. இந்த சிறு ஆராய்ச்சியின் காரணமாக Indian Union என்பது என் மனதில் சமீபகாலத்தில் பதிந்துவிட்டது. இது நாம் தீர்மானிக்கிற விஷயமல்ல. இதுதான் நாம் குடிமக்களாகப் பிறந்து வாழ்கிற இடத்தின் அமைப்பு. அதை இருக்கும் வண்ணம்தானே சொல்லமுடியும். இதை தி.மு.க. என்கிற கட்சி சொல்வதால் எதிர்ப்பதோ, வரவேற்பதோ படித்தவர்க்குப் பொருந்தாது. இது சரியென்பது எனக்குத் தெரியும். அதனால் சரியானதை நான் செய்கிறேன் என்று ஜேம்ஸ் வசந்தன் விளக்கம் அளித்துள்ளார்.
View Comments
தேசிய கீதம் நாட்டு பண் என்ன
வித்தியாசம்...
தூய தமிழ்ல எதை பேசினாலும் எழுதினாலும் உடனே தூக்கிட்டு ஓடி வரது யாருனு பார்த்தா அவனுங்க தான் தேசபக்தி பத்தி பாடம் எடுக்கும் பன்னாடைகள்.....
பாவாடைனு தனி மனித தாக்குதல் நல்ல குடும்பத்தில் பிறந்தவங்க செய்ய மாட்டாங்க, ள...... ஏன்னா அவங்க வூட்டு பொம்பளைங்க பாவாடை உடுத்துறது இல்லை போல