8 வயசு பிள்ளை “தக்காளி”ன்னு பாடுது..கெட்ட வார்த்தை பாடிதான் வாழ வேண்டுமா? அனிருத் மற்றும் சூப்பர்சிங்கரை விளாசிய ஜேம்ஸ் வசந்தன்

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுவிடும். நாடகங்களுக்கு இணையாக அதிக ரசிகர்களை கொண்டுள்ளது ரியாலிட்டி ஷோக்கள். அந்த வகையில் பாட்டு நிகழ்ச்சியின் மூலம் பலருக்கு பிண்ணனி பாடகர்களாக மாறும் வாய்ப்பு கிடைத்தது என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிதான். இது சீனியர், ஜூனியர் என்று 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. ஜூனியர் சீசன் 8ன் ஃபைனல் இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. அதில் நேஹா, கிருஷாங், ரிஹானா, அபினா, ட்ரினிடா போன்ற 5 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மக்களின் விருப்பம் நேஹா தான் முதல் பரிசை வெல்ல வேண்டும் என்பது. ஆனால் கிருஷாங் 60 லட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாக பெற்றார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

8 வயசு பிள்ளை “தக்காளி”ன்னு பாடுது..கெட்ட வார்த்தை பாடிதான் வாழ வேண்டுமா? அனிருத் மற்றும் சூப்பர்சிங்கரை விளாசிய ஜேம்ஸ் வசந்தன் 1

 

ஏற்கனவே வின்னரை தேர்வு செய்துவிட்டு ஓட்டெடுப்பு எதற்கு நடத்துகிறீர்கள் என்று பலரும் சூப்பர் சிங்கரை விமர்சித்து தள்ளினர். ஏற்கனவே இது போல் பல சர்ச்சரவுகள் எழுந்த நிலையில் பலரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்ப்பதையே நிறுத்திவிட்டனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த இறுதிப் போட்டியில் ரிஹானா பாடிய பாடலை கடுமையாக விமர்சத்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள அவர், தற்செயலாக TV பார்த்தேன். Vijay TV Super Singer Junior FINALS LIVE போய்க்கொண்டிருக்கிறது. ஒரு 8-வயது (இருக்கலாம்) பெண் குழந்தை ‘கருத்தவன்ல்லாம் கலீஜாம்’ பாட்டை முழு ஈடுபாட்டுடன் பாடிக்கொண்டிருக்கிறது.

பாடலின் இடையில் வருகிற ‘தக்காளி’ என்கிற வார்த்தையை அந்தப் பாடகரைப் போலவே அழுத்தமாகச் சத்தமிட்டுச் சொல்கிறது கள்ளமறியா அந்தப் பிஞ்சு உதடுகள். எனக்கு ‘திக்’கென்கிறது. அது ஒரு கேவலமான கெட்ட வார்த்தையின் இணைச்சொல் என்பது ஆண்கள் எல்லோருக்கும் தெரியும். அந்தச் சொல்லைப் பாடினால் ஊரு திட்டும், சென்சார் பிரச்சனை வரும். அதனால் அதே போலவே ஒலிக்கிற இந்தச் சொல்லைச் சொல்லி மகிழ்கிற உயரிய சிந்தனையுடைய பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், நடிகரின் சமூகப் பங்களிப்பு இது. இது ஒரு புறம்! ஆனால், இந்தப் பாடலையும், அந்தக் குறிப்பிட்டச் சொல்லையும் அந்தக் குழந்தைக்கு அட்சரம் பிசகாமல் சொல்லிக்கொடுத்த பெற்றோரையும், இசை ஆசிரியரையும், நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினரையும் தமிழ்ச் சமூகம் காலத்துக்கும் வாழ்த்த வேண்டும்!


கெட்ட வார்த்தைகளைப் பாடித்தான் உங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டிய நிலையில் நீங்களெல்லாம் இருக்கிறீர்களென்றால் அதற்கான தளத்தைத் தேர்ந்தெடுங்கள். ஆண்களுக்கு மட்டும் பெரியவர்களுக்கு மட்டும் என்பது போன்ற எச்சரிக்கையுடன் வெளியிடுங்கள். அதற்குப் பிறகு அது பயனாளரின் பொறுப்பு! இப்படி குழந்தைகளும் கேட்கிற, பாடுகிற வெகுஜன ஊடகமான சினிமாப் பாடல்களுக்குள் நஞ்சை இடைச்சொருகல் செய்து ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் களங்கப்படுத்தாதீர்கள். என்று காட்டமாக கூறியுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்