Categories: சமூகம்

ஜம்மூ காஷ்மீரில் பனி சரிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியான மசில் செக்டார் அருகே இருக்கும் ராணுவ நிலையில் பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் பணியின் ஈடுபட்டு வந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மூ காஷ்மீரில் பனி சரிவு 1
ஜம்மூ காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பனி சரிவு

இது தவிர மேலும், ஒரு வீரரைத் தேடும் பணி நடந்துவருவதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இந்த பனிச்சரிவில் 5 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

மிட்ட்கப்பட்டவர்களில் ஒருவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல்போன மற்றொரு வீரரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதே போல், கந்தெர்பால் மாவட்டத்திலும் பனி சரிவு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 5 பேர் சிக்கி இறந்துள்ளனர். மேலும், 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்