சமீப காலமாக இணையத்தில் ட்ரெண்டாகி வரும் மைனரு வேட்டி கட்டி என்கிற பாடலுக்கு தற்போது பிக் பாஸ் பிரபலம் ஜனனியும் நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் .அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நானியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் தான் தசரா. இந்த படத்தில் மைனர் வேட்டி கட்டி என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்யாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி அதை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் பிரபலமாக இருக்கும் ஜனனியும் ரீல்ஸ் ஒன்றை செய்து அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இலங்கையை சேர்ந்த ஜனனி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்தார். அவருக்கு தமிழின் மிக பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் ஜனனி. வயது குறைவாக இருந்த போதிலும் தனது கருத்தை ஆழமாகவும் சுயமாகவும் பேசும் திறமை உடைய பெண்ணாக இருந்ததால் பலருக்கும் ஜனனியை மிகவும் பிடித்து போயிருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தனலட்சுமி மற்றும் அமுதவாணனுடன் இணைந்து தன்னுடைய ஆட்டத்தை ஆடாமல் தனது நண்பர்கள் ஜெயிக்க வேண்டும் என்று ஆடத் தொடங்கினார் ஜனனி. இது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. பலரும் ஜனனிக்கு ஆதரவாக குரல் கொடுத்த போதிலும் ஒரு கட்டத்தில் ஜனனி உடைய தனிப்பட்ட ஆட்டம் வீணாவதால் அவர் வெளியேற்றப்பட வேண்டும் என்று குறைவான வாக்குகளை அளித்து அவரை மக்கள் வெளியேற்றினார். ஆனால் இந்த வெளியேற்றம் செல்லாது என்றும் வேண்டுமென்றே இலங்கை மக்களை பிக் பாஸ் புறக்கணித்தது என்றும் ஆங்காங்கே இலங்கை மக்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் வெளியே வந்த பிறகு ஜனனி சமூக வலைதள பக்கங்களில் மிக ஆக்டிவாக இருக்கிறார். மேலும் தளபதி 67 படமான லியோ படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்கிற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தபோதிலும் ஜனனியின் ஆதரவாளர்களுக்காக அவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஏதாவது வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இந்த பாடலுக்கு கியூட்டாக நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O