பிக்பாஸ் வீட்டிலிருந்து 11ஆவது நபராக ஜனனி வெளியேறியுள்ள தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இன்று வீக் எண்டு எபிசோடு என்பதால் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற ஆர்வம் மக்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது. பிக்பாஸ் தொடங்கி சுமார் 70 நாட்களை கடந்து விட்டது. மீதம் 32 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்றுவரை 11 நபர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 5 வாரங்கள் மீதமுள்ள நிலையில் அடுத்தடுத்து ஐந்து போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டு மீதம் இருக்கும் ஐந்து நபர்களை டாப் 5-ல் வைக்க பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் தற்போது பன்னிரண்டாவது நபராக ஒருவரை வெளியேற்ற பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது. நமது இணையதளத்தில் எடுத்த அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பில் அவர் அதிக வாக்குகளை வாங்கிய போதிலும் அவர் வெளியேறி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போது வரை மொத்தம் பத்து போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். ஜி.பி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம் என்று மொத்தம் பத்து போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். இந்த நிலையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், ஜனனி, ரட்சிதா, ஏடிகே மணிகண்டன் என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து வந்தனர். இதில் அசீம் மற்றும் விக்ரமன் முதல் இரண்டு இடங்களை பிடிக்க மணிகண்டன் கடைசி இடத்தை பிடித்திருக்கிறார். எனவே இவர் தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஜனனி தற்போது வெளியேறி இருக்கிறார்.
இலங்கையை சேர்ந்தவர் ஜனனி. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், செய்தி தொகுப்பாளராகவும் இருந்தார். மேலும் தொடர்ந்து டிக்டாக் செய்து வந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் பல லட்சம் பின் தொடர்பவர்களும் இருக்கிறார்கள்.இந்த பிரபலத்தைக் கொண்டு இவருக்கு பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவர், ஆரம்பம் முதலே அமுதவாணனுடன் சேர்ந்து இவர் அமுதவாணனின் கைப்பாவையாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் நடந்த டாஸ்க்கிலும் விக்ரமனை ஏமாற்றி நாமினேஷன் ப்ரீயில் இருக்கிறார். அனைவரும் ஏடிகே அல்லது மணிகண்டன் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஜனனி வெறியேறியுள்ள செய்தி தற்போது கிடைத்துள்ளது. பிக்பாஸில் 70 நாட்களைக் கடந்த அவர் இந்த வாரம் வெளியேறி இருக்கும் அதிகாரபூர்வ செய்தி தற்போது கிடைத்துள்ளது.