மஞ்சள் நிற புடவையில் தேவதை போல ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி.! வெளியான புது போட்டோஸ்.!

வெளியிட்டது

பிக்பாஸில் கலந்து கொண்டு பல இளைஞர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் தான் ஜனனி குணசீலன். இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் ஜனனி. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. தற்போது மஞ்சள் நிற உடையில் மஞ்சள் காட்டு மைனா போல அவர் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

மஞ்சள் நிற புடவையில் தேவதை போல ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி.! வெளியான புது போட்டோஸ்.! 1

பிக்பாஸில் இலங்கை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. சீசன் மூன்றில் லாஸ்லியா, தர்ஷன் சீசன் ஐந்தில் மதுமிதா, சீசன் ஆறில் ஜனனி ஆகியோரை களம் இறக்கி இருந்தது பிக்பாஸ். ஜனனி இலங்கையைச் சேர்ந்தவர். அங்கு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்தார். மேலும் பிரபல உணவகங்களுக்கு சென்று அங்கு சமைக்கப்படும் சிறந்த உணவுகளை சுவைத்து பார்த்து அதை ரிவ்யூ சொல்லும் நிகழ்ச்சியையும் அவர் வழங்கி வந்தார்.


நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தபோதே அவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்தும் அவர் பிரபலமானார். இந்த பிரபலத்தை கொண்டு அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 6ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார் ஜனனி. ஜனனிக்கு இலங்கை மக்கள் மட்டுமின்றி தமிழ் மக்களின் ஆதரவும் பெரிய அளவில் இருந்து வந்தது. இதனால் ஜனனி சுமார் 80 நாட்கள் வரை தாக்கு பிடித்து வீட்டில் இருந்தார்.

ஆரம்பத்தில் தனியாகவும், தைரியமாகவும் தனது கருத்தை அணித் தரமாகவும் முன்வைத்து வந்த ஜனனி, நாட்கள் செல்ல செல்ல நண்பர்களுடன் இணைந்து குறுகிய வட்டத்திற்குள்ளே இருந்து வந்தார். மேலும் விளையாட்டிலும் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. தனலட்சுமி, அமுதவாணன், ஆயிஷா என்று அவர் தனது நண்பர்களுடனே பெருமளவில் நேரத்தை செலவழித்து வந்ததாகவும் ஜனனி மீது குற்றச்சாட்டு எழுந்தது.


இதனால் ஜனனி பலமுறை ஹவுஸ் மேட்ஸால் நாமினேட் செய்யப்பட்டார். இருந்த போதும் அவரை தமிழ் ரசிகர்கள் காப்பாற்றறியே வந்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அவருக்கு குறைவான வாக்குகளை அளித்து வெளியேற்றினர். ஜனனி பேசும் அழகான தமிழுக்காகவே ஜனனிக்கு பல ரசிகர்கள் இருந்து வந்தனர். இதனால் தான் அவர் எப்போது நாமினேஷனில் வந்தாலும் காப்பாற்றப்பட்டு கொண்டே வந்தார்.

ஒரு கட்டத்தில் ஜனனி விளையாட்டில் முற்றிலும் ஆர்வம் கட்டாமல் நண்பர்கள் ஜெயிக்க வேண்டும் என்ற ரீதியில் விளையாடத் தொடங்கினார். இதனால் பிக்பாஸில் இருந்து ஜனனியை குறைந்து வாக்குகள் அளித்து மக்கள் வெளியேற்றி விட்டனர். மேலும் ஜனனியை வெளியேறிய பின்னர் அவர் இல்லாத பிக்பாஸை இனி பார்க்கப் போவதில்லை என்றும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தனர்.


வெளியே வந்த பின்னர் ஜனனி தொலைக்காட்சிகளுக்கும் youtube சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். மேலும் அவர் தளபதி நடிக்கும் 67 வது படமான லியோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஜனனி, அவ்வபோது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அதை பகிர்ந்திருக்கிறார். அதை பார்த்த பலரும் “மஞ்சள் காட்டு மைனா” போல அழகாக இருக்கிறீர்கள் என்று ஜனனியை புகழ்ந்து கமண்ட் செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்