பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களுள் ஒருவர்தான் மதுமிதா. தற்போது இவருக்கு திருமணமாகி மூன்று வருடங்களுப்பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவரை மதுமிதா என்று சொல்வதைவிட, ஜாங்கிரி, தேனடை என்று சொன்னால் பலருக்கும் தெரியும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவை யாரும் மறக்க முடியாது. எப்பேர்பட்ட படமாக இருந்தாலும் கலாய்த்து தள்ளிவிடுவார்கள். அதில் பெண் காமெடியனாக வந்தவர்தான் மதுமிதா.

தமிழ் சினிமாவில் பெண் காமெடியன்கள் மிக குறைவு. மனோரமா, கோவை சரளா, ஊர்வசி போன்ற மிக சிலரே தனியாக காமெடி செய்வார்கள். மற்ற பெண் காமெடியன்கள் ஆண்களுடன் இணைந்து மட்டுமே காமெடி செய்வது வழக்கம். அப்படி லொள்ளுசபாவில் தொடங்கி வெள்ளித்திரை வரை சென்று கலக்கி கொண்டிருப்பவர்தான் மதுமிதா.
ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடத்து பிரபலமானவர் மதுமிதா. பின்னர் சின்ன பாப்பா, பெரியபாப்பாவிலும் நடித்தார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். அங்கு காவிரி பிரச்சினை சம்பந்தமாக அவர் பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதனால் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள கூட துணிந்து கையை கத்தியால் அறுத்துக் கொண்டார் மதுமிதா.
மேலும் வெளியில் வந்து வீட்டில் இருந்த அனைவரும் என்னை ராக்கிங் செய்தார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த அவர் மருத்துவ உதவியுடன் சகஜ நிலைக்கு திரும்பினார். 2019ம் ஆண்டே மதுமிதாவுக்கும் ஜோயல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மதுமிதாவுக்கு மிகுந்த பக்கபலமாக ஜோயல் இருந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் மதுமிதா இருந்த போது மதுமிதாக்கு ஆதரவாக மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைத்து வந்தார். இந்த நிலையில் பிக்பாஸுக்குப் பின்னர் கடைசியாக அனபெல் சேதுபதியில் நடித்து இருந்தார் மதுமிதா. பின்னர் அவர் எந்த நிகழ்ச்சியிலும் தலைகாட்டாமல் இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பதாக இருப்பதை அறிவித்து இருந்தார் மது. இந்த நிலையில் நேற்று அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அவரது கணவர் ஜோயல் அறிவித்துள்ளார். இதனால் திரை பிரபலங்கள் பலரும் மதுமிதாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்..