இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ‘ஜவான்’ தினசரி வசூலை வாரி குவித்து வரும் இந்த திரைப்படத்தின் 16-வது நாள் வசூலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆயிரம் கோடிக்கு இன்னும் சில கோடிகள் மட்டுமே தேவை இருக்கும் நிலையில் தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர் இயக்குனர் அட்லி தமிழில் நான்கு படங்களை்ய மட்டுமே இயக்கி இருந்த போதிலும் நான்குமே வெற்றி படங்களாக கொடுத்திருந்தவர். இந்த நிலையில் அவர் முதன்முறையாக ஹிந்தி திரைத்துறை பக்கம் தனது கவனத்தை திருப்பி இருந்தார்.

ஹிந்தி திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராகவும், வசூல் நாயகனாகவும் விளங்கி வரும் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்கிற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்க ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் மூலமாக அட்லீ நயன்தாரா அனிருத் மூவரும் ஹிந்தியில் அறிமுகமாகி இருந்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் மூன்று மொழிகளில் வெளியாகி இருந்த இந்த திரைப்படத்தின் தினசரி வசூல் நிலவரத்தை படத்தை தயாரித்த ரெட் சில்லிஸ் நிறுவனம் வெளியிட்டு வந்தது. தங்களது twitter பக்கத்தில் பதிவிட்டு வரும் அந்த நிறுவனம் முதல் நாள் தொடங்கி பதினாறாவது நாள் வரை எவ்வளவு வசூலித்தது என்பதை அறிவித்து வருகின்றனர்.
முதல் நாளே ரூ.129 கோடி ரூபாயை வசூலித்திருந்த ‘ஜவான்’ திரைப்படம் 16வது நாள் முடிவில் ரூபாய் ரூ.953.97 கோடியை வசூலித்திருக்கிறது. இன்னும் ரூ.47 கோடி வசூலை பெற்றால் படம் ஆயிரம் கோடியை நெருங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது முதல் படத்திலேயே ஆயிரம் கோடி வசூலை குவித்து சாதனை படைத்திருக்கும் இயக்குனர் அட்லிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Twitter Original Source From: Red Chillies Entertainment