Categories: சினிமா

7 நாளில் வசூலில் அடித்து நொறுக்கிய ‘ஜவான்’ திரைப்படம்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

வெளியிட்டது

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் 7 நாட்களில் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். வசூல் நிலவரம் குறித்த தினசரி அப்டேட்டுகளை படத்தை தயாரித்த ரெட் சில்லீஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வரும் நிலையில், தற்போது ஏழு நாள் முடிவில் சுமார் ரூ.650 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்து மகத்தான சாதனை புரிந்திருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறனர். ஹிந்தியில் முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படத்தை இயக்கியிருந்தார் அட்லீ. இந்த படம் வடநாட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.

7 நாளில் வசூலில் அடித்து நொறுக்கிய 'ஜவான்' திரைப்படம்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! 1
இதில் தமிழ் நடிகர்களான நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் மூன்று மொழிகளில் வெளியாக இருந்த இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. முதல் நாள் ரூ.120 கோடிக்கும் அதிகமான வசூலையும், இரண்டாவது நாள் ரூ.250 கோடி வசூலையும் மூன்றாவது நாள் ரூ.380 கோடி வசூலையும் கடந்து சாதனை படைத்திருந்த்து ‘ஜவான்’ திரைப்படம். இந்த படத்தை தயாரித்த ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தினசரி வசூல் நிலவரம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில் ஏழாவது நாளான இன்று ரூ.660.03 கோடி வசூலை பெற்று சாதனை படைத்திருக்கிறது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த வாழ்நாள் வசூலே ரூ.600 கோடி என்று இருந்த நிலையில் இந்த ஜவான் திரைப்படம் ஏழே நாட்களில் ரூ.660 கோடி வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் விடுமுறை தினங்கள், விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்கள் ஆகியவை வர இருப்பதால் இன்னும் சில தினங்களில் அசாத்தியமாக இது ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்