Categories: சினிமா

8வது நாளில் குறைந்த வசூல்.! 1000 கோடியை நெருங்க இன்னும் இவ்வளவு கோடி வேணுமா?

வெளியிட்டது

நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்திலிருந்து தினசரி கலெக்ஷன் விவரத்தை படக் குழுவினர் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். எட்டு நாளில் ரூ.700 கோடியை நெருங்கி மகத்தான சாதனை படைத்திருக்கிறது ஜவான் திரைப்படம். ஆனால் இது முந்தைய நாட்களை விட வசூலில் குறைந்து இருக்கிறது. நேற்றைக்கு சுமார் ரூ.660 கோடி வசூலை நெருங்கி இருந்த நிலையில் இன்று ரூ.30 கோடி மட்டுமே அதிகமாக வசூலித்து இருக்கிறது ஜவான் திரைப்படம். இந்த படம் ஆயிரம் கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்த்த வரும் நிலையில் ரூ.700 கோடியை மட்டுமே பெற்று இருக்கிறது.

8வது நாளில் குறைந்த வசூல்.! 1000 கோடியை நெருங்க இன்னும் இவ்வளவு கோடி வேணுமா? 1

நாளை மற்றும் நாளை மறுநாள் வார விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதாலும் மூன்று நாளில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் அட்லி தமிழ் திரையுலகில் இருந்து ஹிந்தி திரைத்துறைக்கு முதன்முறையாக சென்ற திரைப்படம் தான் ஜவான். முதல் படமே ஹிந்தி சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷாருக்கானை வைத்து இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, பிரியாமணி, நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் டிரைலர், டீசர் பாடல்கள் என அனைத்தும் வெற்றி பெற்ற நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் படம் வெளியாகி ஒவ்வொரு நாளும் வசூலை குவித்து வருகிறது. முதல் நாள் மட்டும் ரூ.129 கோடி வசூலை பொறுத்திருந்த இந்த படம் மூன்றாவது நாளில் ரூ.384 கோடியை குவித்திருந்தது. நேற்றைய நிலவரப்படி ரூ.660 கோடி வசூலை பெற்றிருந்த இந்த திரைப்படம் இன்று ரூ.700 கோடியை தாண்டும் என்று எதிர்பார்த்த நிலையில், ரூ.700 கோடிக்கும் குறைவாக ரூ.696.67 கோடியை மட்டுமே பெற்று இருக்கிறது. மேலும் எட்டு நாட்களில் ரூ.700 கோடியை நெருங்கி சாதனை படைத்திருக்கிறது ஜவான் திரைப்படம். நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் மற்றும் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை ஆகியவை வரை இருப்பதால் கண்டிப்பாக இன்னும் இரண்டொரு தினங்களில் ரூ.100 கோடி வசூலை இந்த படம் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்