Categories: சினிமா

நான்கே நாட்களில் ஜெயிலரின் வாழ்நாள் வசூலை நெருங்கிய ஜவான் வசூல்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

வெளியிட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூலை நான்கே நாட்களில் நெருங்கி மகத்தான சாதனை படைத்திருக்கிறது ஜவான் திரைப்படம். இந்த திரைப்படத்தின் மூலமாக தற்போது ஹிந்தியில் மிகப்பெரிய இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் இயக்குனர் அட்லீ. தமிழ் திரையுலகில் நான்கு படங்களை கொடுத்து நான்குமே வெற்றி படங்களாக மாற்றிக் காட்டியவர் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி, தெறி, பிகில், மெர்சல் என இவர் இயக்கிய நான்கு படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்திருந்தது. இந்த நிலையில் அவர் ஹிந்தி சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கியிருந்தார்.

நான்கே நாட்களில் ஜெயிலரின் வாழ்நாள் வசூலை நெருங்கிய ஜவான் வசூல்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! 1

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் மூன்று மொழிகளில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இவர்களுடன் தீபிகா படுகோன் போன்ற ஹிந்தி முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இந்த படத்தை ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. முதல் நாள் மட்டுமே ரூ.129 கோடி வசூலைக் குவித்து இருந்த இந்த திரைப்படம், இரண்டாவது நாளில் ரூ.240 கோடி வசூலை குவித்து இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது நாளில் ரூ.384.69 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது .


படம் வெளியாகி நான்கு நாட்களில் நிறைவடைந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அதில் நான்கு நாட்கள் முடிவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.529.79 கோடிகளை வசூல் செய்து இந்த வார இறுதியில் மிக அதிகமான கலெக்சன் லிஸ்டில் ஜவான் திரைப்படம் இணைந்து இருக்கிறது. இது அட்லீ மற்றும் ஷாருக்கான் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தில் சுமார் ரூ.600 கோடி வசூலை குவித்த நிலையில், வெறும் 4 நாட்களில் ரூ.520.79 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. நாளை இந்த வசூல் ரூ.600 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்