ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபாவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை அவர் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகள் தான் ஜெ தீபா. இவர் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் முதன் முதலாக அனைவருக்கும் தெரிய வந்தார். ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க முடியாமல் தன்னை சிலர் தடுப்பதாகவும் அவர் பேட்டி அளித்திருந்தார். ஜெயலலிதா இறந்த நாளன்று போயஸ் கார்டன் வீட்டில் இறுதிச்சடங்குகளை செய்வதற்காக கூட தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கண்ணீர் மல்க பேட்டிகளில் பேசி வைரலானார்.

போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்க அப்போதைய தமிழக அரசு திட்டமிட்டபோது ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசு நாங்கள்தான் என்று வழக்கு தொடுத்து போயஸ் கார்டன் இல்லத்தை அவரும் அவரது தம்பி தீபக்கும் கைப்பற்றி இருந்தனர். மேலும் ஜெ தீபா பேரவை என்கிற அரசியலமைப்பை தொடங்கி, சில காலத்திலேயே அந்த அமைப்பையும் கலைத்துவிட்டார். ஜெயலலிதாவுக்கும் தீபாவுக்கும் 2002 ஆம் ஆண்டு வரை சமூகமாக இருந்த நட்பு ஏதோ ஒரு சில காரணத்தினால் நீடிக்காமல் போனது. தீபாவின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த போது அந்த இறப்பிற்கு கூட ஜெயலலிதா வரவில்லை. மேலும் ஜெ தீபாவின் கணவர் மாதவன் கிறிஸ்தவர் என்பதால் ஜெயலலிதாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும் அதனால் ஜெ தீபாவின் திருமணத்தில் கூட ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது.
இந்த நிலையில் தீபாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. தீபாவிற்கும் மாதவனுக்கும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது தனது முகநூலில் தனக்கும் மாதவனுக்கும் பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்திருந்தார் ஜெ. தீபா அக்டோபர் 31ஆம் தேதி வேளச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாகவும் தாயும் சேய் இருவரும் நலமாக இருப்பதாகவும் அவரது கணவர் மாதவன் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்திருக்கிறார். சிலர் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்று இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
தீபாவிற்கு பெண் குழந்தை பிறந்திருப்பதால் மீண்டும் ஜெயலலிதாவே வந்து பிறந்திருப்பதாக தீபாவின் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கின்றனர். Watch the below video.!
Youtube video code embed credits: Thanthi TV