Categories: சினிமா

ஜெயம் ரவியின் 30வது படம்.. ப்ரியங்கா மோகனுடன் புதிய படத்தின் பூஜை தொடக்கம்

வெளியிட்டது

ஜெயம் ரவி நடிக்கும் 30வது படத்திற்கான படபூஜைகள் ஆரம்பமாகி உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்குகிறார். ஆடி 18 என்பது திரையுலகினர் பலருக்கும் நல்ல நாளாக கருதப்படுகிறது. பலரும் தங்கள் புதுப்படங்களை அறிவித்து வருகின்றனர். நேற்று கூட சிவகார்த்திகேயன் தனது மாவீரன் படத்தின் பூஜையை ஆரம்பித்து இருத்தார். அந்த வகையில் ஜெயம் ரவி தனது 30வது படத்தின் பூஜையை இன்று முடித்துள்ளார். ஜெயம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமனாவர் ரவி. இவருடைய அண்ணன் இயக்குனராக இருந்த போதிலும், தானாக உழைத்து சாதித்து காட்டிய ஒருவராக இருக்கிறார் ஜெயம் ரவி.

ஜெயம் ரவியின் 30வது படம்.. ப்ரியங்கா மோகனுடன் புதிய படத்தின் பூஜை தொடக்கம் 1

இந்த படத்தில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா அருள் மோகன் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் நட்டி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஹாரிஸ் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணையும் நான்காவது படம் இது. தாம் தூம், எங்கேயும் காதல், வனமகன் உள்ளிட்ட மூன்று படங்களில் ஏற்கனவே இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படங்களின் பாடல்கள் அனைத்துமே செம்ம ஹிட்டாகி இருந்தன. அதனால் ஜெயம் ரவியின் இந்த புது படத்திற்கான பாடல்களையும் ரசிகர்கள் ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வாரம் தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் கேரளாவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மணி ரத்னம் உருவாக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து முடித்துள்ளார் ஜெயம்ரவி. இதையடுத்து அகிலன், இயக்குனர் அஹமது இயக்கத்தில் ஜன கன மண படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவரின் 30வது படத்தை பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய எம்.ராஜேஸ் இயக்குவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. காமெடி கலந்த ரொமான்ஸ் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அகிலன் படத்தை தயாரித்த ஸ்கிரீன் சீன் நிறுவனமே தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்