ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் அகிலன் படத்தில் இருந்து தற்போது ஸ்னீக் பீக் காட்சிகள் எனப்படும் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே பல ஆயிரம் பார்வையாளர்களைப் பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து இருக்கிறது அந்த வீடியோ. தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதற்கு முன்பு சிலர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். கடந்த 20 வருடமாக நடித்துக் கொண்டிருக்கும் போதிலும் குறைந்த படங்களிலேயே அவர் நடித்திருக்கிறார். கதையை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறார் ஜெயம் ரவி. ஒரு இன்டர்வியூவில் பேசியிருந்த ஜெயம் ரவி, பலரும் தன்னிடம் 20 ஆண்டுகளில் குறைந்த படங்களிலேயே நடித்திருப்பதாக கேட்கிறார்கள். ஆனால் எத்தனை படம் நடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எத்தனை தரமான படங்களில் நடிக்கிறோம் என்பது தான் முக்கியம் என்று பேசியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு சில வருடங்களாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தொடர்ந்து ஜெயம் ரவி அகிலன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், சமீபத்தில் படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. மேலும் “துரோகம் பண்ணு” என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகியிருந்தது. மூன்று வருட இடைவேளைக்குப் பிறகு தனி கதாநாயகன் படமாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கிறது அகிலன் திரைப்படம். இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணனுடன் மீண்டும் இரண்டாவது முறையாக கைகோர்த்து இருக்கிறார் ஜெயம் ரவி. இந்த வாரம் வேறு எந்த முன்னணி நடிகரின் படமும் வெளியாகாத காரணத்தாலும், போட்டிக்கு வேறு படமும் இல்லாததாலும் அகிலன் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் படத்திலிருந்து தற்போது ஸ்னீக் பீக் காட்சிகள் எனப்படும் சின்ன ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அந்த ப்ரோமோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். துறைமுகத்தில் நடக்கும் கடத்தல்கள் பற்றிய படமாக இது இருக்கும் என்று இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுதே தெரிந்தது. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்னீக் பீக் காட்சிகளை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Moviebuff Tamil