Categories: சினிமா

பிரிவதாக அறிக்கை வெளியான உடனே Jayam Ravi மனைவி Aarti-க்கு கொடுத்த அதிர்ச்சி..!

வெளியிட்டது

ஜெயம் படத்தில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்து நல்ல வரவேற்பினை பெற்றவர் ஜெயம் ரவி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இவர் நடித்த தனி ஒருவன் படம் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த மிருதன், டிக் டிக் டிக் படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் இருந்து பெற்று கொடுத்து இருக்கிறது.

பிரிவதாக அறிக்கை வெளியான உடனே Jayam Ravi மனைவி Aarti-க்கு கொடுத்த அதிர்ச்சி..! 1

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார். இது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறி உள்ளார். இந்த வழக்கை நீதிமன்றம் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளது.

வெளியிட்டது

புதிய செய்திகள்