நடிகர் ஜெயம் ரவி தற்போது சென்னை ஈசிஆரில் புது பங்களா ஒன்றைக் கட்டி குடியேறி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழ் உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் சுமார் 25க்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்துள்ள இவர், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் அருள் மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியின் மவுசு கூடியிருக்கிறது. இந்த நிலையில் ஜெயம் ரவி தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஒரு புதிய பங்களா ஒன்றை வாங்கி குடியேறி இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. சமீபத்தில் வீட்டில் நடந்த பூஜை என்று சில புகைப்படங்களை ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி வெளியிட்டு இருந்தார்.
ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ் ரவி, அயான் ரவி என்கிற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் ஆரவ் ரவி ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். புதுமனை புகுவிழாவை முடித்த கையோடு ஜெயம் ரவி வீட்டில் சுமங்கலி பூஜையும் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பலரும் வந்து ஆர்த்தியை வாழ்த்தியிருந்தனர். அந்த புகைப்படங்களை ஆர்த்தியே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
குறிப்பாக அந்த நிகழ்ச்சிக்கு நடிகை குஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டிருந்தனர். சென்னை டி நகர் பத்மநாபன் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஜெயம் ரவி மற்றும் குடும்பத்தினர் தற்போது குடும்பத்துடன் ஈசிஆர் பகுதியில் குடியேறியுள்ள தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த இரு வீடுகள் இல்லாமல் ஜெயம் ரவிக்கு ஆந்திராவிலும் ஒரு வீடு இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கின்றது. தற்போது புது வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக ஜெயம் ரவி 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது கைவசம் இறைவன், சைரன் உள்ளிட்ட படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். மேலும் தனது அண்ணன் உடன் இணைந்து தனி ஒருவன் பாகம் இரண்டையும் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
படங்களில் பிசியாக நடித்து வரும் ஜெயம் ரவி தனது குடும்பத்திற்காகவும் அடிக்கடி நேரத்தை செலவிட்டு வருகிறார். குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. காதலர் தினத்தன்று தனது மனைவியை தாஜ்மஹாலுக்கு அழைத்துச் சென்ற அவர் அங்கு செய்த சர்ப்ரைஸ்களும் புகைப்படங்களாக வெளியானது. இந்த நிலையில் தற்போது புது வீட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.!
Youtube Video Embed Code Credits: Cini Bytes