Categories: சினிமா

விவாகரத்து Jayam Ravi-ன் தனிப்பட்ட முடிவு..! குற்றம் சாட்டிய மனைவி Aarti Ravi..!

வெளியிட்டது

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் அதே சமயம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு அடுத்தமாதம் 10ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

விவாகரத்து Jayam Ravi-ன் தனிப்பட்ட முடிவு..! குற்றம் சாட்டிய மனைவி Aarti Ravi..! 1

அந்த அறிக்கையில், ஜெயம் ரவியின் இந்த அறிக்கை எனது கவுரவமான திருமண வாழ்க்கையை இழிவாக்கி விட்டது. நான் பலமுறை ஜெயம் ரவியிடம் பேச முயன்றேன் அதற்கு அவர் என்னிடம் பேசவில்லை. அவர் வெளியிட்ட அறிக்கை எனது ஒப்புதல் இல்லாமல் மற்றும் எனது கவனத்திற்கு கொண்டு வராமலும் வெளியிட்ட அறிக்கை.நானும் என் குழந்தைகளும் எதுவும் தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறோம்.

விவாகரத்து ஜெயம் ரவியின் தனிப்பட்ட முடிவு,என் நடத்தையில் களங்கம் விளைவிக்கும் வகையில் பொதுவெளியில் நடத்தப்படும் தாக்குதலை சமாளிப்பதற்கு கஷ்டமாக உள்ளது. இந்த ஆதாரமற்ற குற்றசாட்டுகள் எனது குழந்தைகளை பாதிக்கிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் என்னையும் எனது குழந்தைகளின் தனி உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என ஆர்த்தி கூறி உள்ளார்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்