Categories: சினிமா

ஜெயம் ரவியின் 32வது படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்.! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு.!

வெளியிட்டது

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 32 வது படத்தின் பட பூஜை தற்போது பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த பட பூஜையில் ஜெயம் ரவி மற்றும் நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன், கீரீத்தி ஷெட்டி, தேவயாணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்போது தனது 32 ஆவது படமான “ஜீனி” என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பட பூஜை சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜெயம் ரவியின் 32வது படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்.! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு.! 1

2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. இந்த படத்திற்கு பின்னர் இந்த படத்தின் பெயரே இவரது அடையாளமாகிப் போனது. திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை கடந்து போதிலும் குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்திருக்கிறார்.  பொன்னியின் செல்வன் திரைப்படம் இவர் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படமாகும். இந்த திரைப்படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியின் மவுசு சற்று கூடி இருக்கிறது. அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது கைவசம் இறைவன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுமட்டுமில்லாமல் பெயரிடப்படாத ஒரு படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார்.

பல படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜெயம் ரவி தற்போது ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. ஜீனி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுன் என்பவர் இயக்க இருக்கிறார். இவர் பிரபல இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தற்போது ஜெயம் ரவியை வைத்து வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 25 வது படத்தை புவனேஷ் இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கப்பி ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்திற்கு இசைப் புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 25வது படம் என்பதால் இந்த படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று படத்தின் பூஜை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இயக்குனர் புவனேஷ், நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஐசரி கணேசன் மருமகன் வருண், நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கப்பி, நடிகை தேவயானி ஆகியோர் கலந்து கொண்டனர். தேவயானியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Youtube Video Embed Code Credits: FullonCinema

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்