Categories: சினிமா

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது.! வீடியோ உள்ளே.!

வெளியிட்டது

நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘சைரன்’ படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2002ம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமாகி இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் ஜெயம் ரவி. தற்போது கைவசம் ‘சைரன்’ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சைரன்' படத்தின் ட்ரைலர் வெளியானது.! வீடியோ உள்ளே.! 1

‘சைரன்’ படத்தை அந்தோணி பாக்கியராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான ‘விசுவாசம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும் ‘இரும்புத்திரை’ உள்ளிட்ட படங்களிலும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தற்போது ‘சைரன்’ படத்தை இயக்கியதன் மூலமாக இவர் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படத்தை சுஜாதா விஜயகுமாரின் “ஹோம் மூவி மேக்கர்ஸ்” நிறுவனம் தயாரித்து இருக்கிறது. சுஜாதா விஜயகுமார் ஜெயம் ரவியின் சொந்த மாமியார் ஆவார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து ‘அடங்கமறு’, ‘பூமி’ போன்ற படங்களை தயாரித்திருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக ‘சைரன்’ படத்தை தயாரித்திருக்கிறார்.


படம் வருகிற பிப்ரவரி 16ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தில் இருந்து ட்ரெய்லர் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு பாடல்கள் வெளியாக நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது ட்ரெய்லர் வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்