நடிகர் ஜெயராம் வீட்டில் களை கட்டும் திருமண கொண்டாட்டங்கள்.! கோலாகலமாக நடந்த மகளின் நிச்சயதார்த்தம்.!

வெளியிட்டது

தமிழ் மற்றும் மலையாளத்தில் மூத்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயராமின் மகளின் திருமண நிச்சயதார்த்தம் இன்று திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.

நடிகர் ஜெயராம் வீட்டில் களை கட்டும் திருமண கொண்டாட்டங்கள்.! கோலாகலமாக நடந்த மகளின் நிச்சயதார்த்தம்.! 1

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ஜெயராம் மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகராக இருந்த போதிலும், அவரது பூர்வீகம் தமிழ்நாடு ஆகும்.

ஜெயராமனின் தாயார் கும்பகோணம் அருகே மாயவரத்திற்கு அருகில் ‘அம்மங்குடி’ என்கிற ஊரைச் சேர்ந்தவர் ஆவார். பொருளாதாரம் படித்திருக்கும் ஜெயராம் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

பல குரலில் பேசும் திறமையும், சிறந்த நடிப்புத் திறமையும் செண்டை மேளம் கலைஞரான இவர் முதல் முறையாக 1988ம் ஆண்டு வெளியான ‘அபரன்’ என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதன் பின்னர் 1992ம் ஆண்டு வெளியான ‘கோகுலம்’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருக்கும் இவர் தமிழில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ‘புருஷ லட்சணம்’, ‘முறை மாமன்’, ‘பெரிய இடத்து மாப்பிள்ளை’, ‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’, ‘நைனா’, ‘ஜூலி கணபதி’, ‘பிரிவோம் சந்திப்போம்’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்திருந்தது.

மேலும் இவர் விஜயுடன் இணைந்து ‘துப்பாக்கி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘தளபதி 68’ படத்திலும் நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் ‘பொன்னியின் செல்வன்’ என்கிற மிகப்பெரிய காவிய நாவலில் வரும் கற்பனை கதாபாத்திரமான ‘ஆழ்வார்க்கடியான் நம்பி’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை வென்றிருந்தார்.

இவருக்கு 1992ம் ஆண்டு பார்வதி என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மாளவிகா ஜெயராம் என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் காளிதாஸ் ஜெயராம் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார்.

தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு சமீபத்தில் தனது காதலியான தாரணி காலிங்கராயர் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. இந்த ஜோடிகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தொடர்ந்து அவரது தங்கை மாளவிகா ஜெயராமுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இன்று திருவனந்தபுரத்தில் வைத்து கோலாகலமாக மாளவிகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

தனது மகளை நவ் க்ரிஷ் என்பவருக்கு நிச்சயம் செய்து கொடுத்திருக்கிறார் ஜெயராம்.

விரைவில் காளிதாஸ் மற்றும் அவரது தங்கை மாளவிகா இருவரின் திருமணம் நடைபெற இருப்பதால் ஜெயராம் வீட்டில் திருமண கொண்டாட்டங்கள் களை கட்டி இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்