ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்து இருந்த நிலையில் தற்போது குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடத்தி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பலரும் தீபாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகள் தான் ஜெ தீபா. இவர் 2016ம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் முதன் முதலாக அனைவருக்கும் தெரிய வந்தார். ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க முடியாமல் தன்னை சிலர் தடுப்பதாகவும் அவர் பேட்டி அளித்திருந்தார். ஜெயலலிதா இறந்த நாளன்று போயஸ் கார்டன் வீட்டில் இறுதிச்சடங்குகளை செய்வதற்காக கூட தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கண்ணீர் மல்க பேட்டிகளில் பேசி வைரலானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கும் தீபாவுக்கும் 2002ம் ஆண்டு வரை சமூகமாக இருந்த நட்பு ஏதோ ஒரு சில காரணத்தினால் நீடிக்காமல் போனது. தீபாவின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த போது அந்த இறப்பிற்கு கூட ஜெயலலிதா வரவில்லை. மேலும் ஜெ தீபாவின் கணவர் மாதவன் கிறிஸ்தவர் என்பதால் ஜெயலலிதாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும் அதனால் ஜெ தீபாவின் திருமணத்தில் கூட ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்க அப்போதைய தமிழக அரசு திட்டமிட்டபோது ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ வாரிசு நாங்கள்தான் என்று வழக்கு தொடுத்து போயஸ் கார்டன் இல்லத்தை அவரும் அவரது தம்பி தீபக்கும் கைப்பற்றி இருக்கின்றனர்.
மேலும் தீபா தான் தொடங்கிய கட்சியை கலைத்துவிட்டு தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தீபாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. தீபாவிற்கும் மாதவனுக்கும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த நிலையில் அவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கார்த்திகா என பெயர் வைத்து இருப்பதாக கூறி பெயர் சூடு விழா வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் ஜெ தீபா. அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video.!
Youtube video code embed credits: Viral Videos 3.O