Categories: சினிமா

ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா!

1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதனை மையமாக வைத்து உருவாக்கப்படும் படத்தில் நடிகர் ஜீவா ஒப்பந்தம் போட்டுள்ளார்.

83 என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் ஹிந்தியில் உருவாகிறது. இந்த படத்தில் கபில்தேவ் ஆக ரன்வீர்சிங் நடிக்கின்றார். அதேவேளையில் கபில் தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.

ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா! 1
ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவா

83களில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற பொழுது அந்த அணியில் தமிழகத்தை வீரரான ஸ்ரீகாந்த் இடம் பெற்றிருந்தார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தான் நடிகர் ஜீவா ஒப்பந்தம் போட்டுள்ளார்.

தற்போது இதற்கான போஸ்டரும் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் ஏப்ரல் 10 அன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக எந்த ஸ்ரீகாந்த் 43 டெஸ்ட் போட்டிகளில் 2062 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4,091 ரன்கள் குவித்துள்ளார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஸ்ரீகாந்துக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்