Categories: அரசியல்

ஜே.என் யூ துணை வேந்தர் பதவி விலக வேண்டும்: 250 சர்வதேச அமைப்புகள் கோரிக்கை!

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அதன் துணை வேந்தர் பதவி விலக வேண்டுமென பன்னாட்டு மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஜே.என் யூ துணை வேந்தர் பதவி விலக வேண்டும்: 250 சர்வதேச அமைப்புகள் கோரிக்கை! 1

நாட்டின் தலை சிறந்த பல்கலைக்கழகமாக திகழும் ஜே.என்.யூவின் முன்னாள் மாணவர்களின் பெயர்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். உருவாக்கப்பட்ட காலம் முதல் இன்றைய காலம் வரை பல நாடுகளின் பிரதமர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், இந்திய மத்திய அமைச்சர்கள், மாநில தலைவர்கள், சிறந்த ஆராய்சியாளர்கள் என அத்தனை துறைகளிலும் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறது.

இத்தகைய பல்கலைக்கழகத்தின் முக்கிய அம்சமே அதன் மாணவர் அமைப்பு தான். தனித்த அரசியலைப்புக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஜே.என்.யூ மாணவர் சங்கம் நாட்டின் முக்கிய பிராச்சனைகளை கையில் எடுத்து போராடி வருகிறது. நாடு முழுக்க உள்ள பிரச்சனைகளை அரசியல்மயபடுத்தும் அமைப்பாக மாணவர் சங்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட முகமூடி குண்டர்களின் தாக்குதலால் பல பொருட்கள் உடைக்கப்பட்டு, மாணவர்களும், பேராசிரியர்களும் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் தற்போது புதிய நெருக்கடி ஒன்று பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற சுமார் 250 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்புகள் ஒன்றிணைத்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகதீஷ்குமார் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “அரசியல் ரீதியாக ஆதரவளிக்கப்பட்ட குண்டர் கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்டது. இது கல்வி சுதந்திரம், தன்னிசையான பல்கலைக்கழகத்தை அரசு அதிகாரத்திடம் இருந்து பாதுகாத்தல், தங்களது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாத்தல் ஆகிய கடமைகள் மீறப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தைப்பெறும் போது, காவல்துறையை தொடர்புகொள்ள தவறியது, தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களை குற்றவாளிகளாக்குவது போன்ற செயல்களால் துணை வேந்தர் மீதான நம்பக தன்மை போய்விட்டது. இதனால் அவர் பதவி விலக வேண்டும்” என கூறியுள்ளனர்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்