Categories: சினிமா

பிரான்சில் ஈபிள் டவர் முன்பு நின்று, டான்ஸ் மாஸ்டர் சதீசுடன் செம்ம Cute ஆக ஆடிய ஜோனிதா காந்தி.!

வெளியிட்டது

பிரபல பின்னணி பாடகி ஜோனிதா காந்தி பிரபல நடன இயக்குனர் சதீஷ் மாஸ்டர் உடன் இணைந்து பிரான்சில் உள்ள ஈபில் டவர் முன்பு நின்று நடனமாடி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமீப காலமாக பல நல்ல பாடல்களை கொடுத்து வருபவர் பின்னணிப் பாடகி ஜோனிதா. இவர் சமீபத்தில் பாடியிருந்த அரபி குத்து பாடல் பிரபலமானது. அனிருத் இசையமைத்திருந்த அந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இந்தப் பாடலை ஜோனிதா பாடிய பின்பு இவர் தமிழில் மிகவும் பிரபலமானார். இவர் அடிப்படையில் ஒரு இந்தோ கன்னடிய பாடகி ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என இவர் இந்திய மொழிகள் பலவற்றில் பாடியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஜோனிதா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

பிரான்சில் ஈபிள் டவர் முன்பு நின்று, டான்ஸ் மாஸ்டர் சதீசுடன் செம்ம Cute ஆக ஆடிய ஜோனிதா காந்தி.! 1
ஜோனிதா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்.இவருக்கு ஏழு வயதாக இருக்கும்போது கனடா சென்று விட்டார். ஆனாலும் அங்கிருந்தபடியே்க
முறையாக இசையை கற்றுக்கொண்டு இசைக்கலைஞராக வலம் வருகிறார். இவர் முதன் முதலில் தான் பாடிய பாடல்கள் அனைத்துமே இணையத்தில் ஆல்பமாக பதிவேற்றி வந்தார். பின்னர் இவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலாக சென்னை எக்ஸ்பிரஸ் என்கிற படத்தில் இவர் பாடினார். இதுவே இவரின் முதல் திரைப்பட பாடல் ஆகும். தற்போது இவர் பல படங்களில் பாடி வருகிறார். ஏ ஆர் ரகுமான் இசையில் முதலில் ஒரு ஹிந்தி பாடலை பாடினார். பின்னர் ஓகே கண்மணி படத்தில் மன மன மெண்மல் மனதில் என்ற பாடலை பாடியிருக்கிறார்.


பின்னர் அவருக்கு பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இவர் பாடிய இறைவா, செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்துப் போன்ற பாடல்கள் வேற லெவலில் ஹிட் அடித்திருக்கிறது. தற்போது இவர் நயன்தாரா தயாரிக்கும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த போஸ்டர்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் அவர் நடன இயக்குனர் சதீஷ் மாஸ்டர் உடன் சேர்ந்து பிரான்சில் உள்ள ஈபில் டவர் முன்னால் நின்று நடனமாடி அந்த வீடியோவை தற்போது பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!

 

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்