Categories: சினிமா

ஹீரோயினாக களம் இறங்கிய ஜோனிதா காந்தி..First Look போஸ்ட்டரை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

வெளியிட்டது

சமீபகாலமாக அனைவரும் ரசித்து கேட்ட பாடல் என்றால் அது அரபிக் குத்து தான். பீஸ்ட் படத்தில் வந்த அந்த பாடலை பாடியவர் ஜோனிதா காந்தி. அனிருத் இசையில் அமைந்திருந்த அந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். ஜோனிதா காந்தி அடிப்படையில் ஒரு இந்தோ – கனடிய பாடகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளில் பாடியுள்ளார். சமூக வலைத்தளங்கில் மிக ஆக்டிவாக இருக்கும் ஜோனிதா பல கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதுண்டு. இதனால் இவரை பின் தொடர்பவர்கள் அதிகம். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் 7 வயதாக இருக்கும் போதே கனடா சென்றுவிட்டார். ஆனாலும் அங்கிருந்தபடியே இசையைக் கற்றுக் கொண்டு இசைக் கலைஞராக வலம் வந்தார்.

ஹீரோயினாக களம் இறங்கிய ஜோனிதா காந்தி..First Look போஸ்ட்டரை வெளியிட்ட விக்னேஷ் சிவன் 1

முதலில் இவர் தான் பாடிய பாடல்களை இணையத்தில் பதிவேற்றி வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் சென்னை எக்பிரஸ் என்னும் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே இவர் திரை உலகில் பாடகியாக அறிமுகம் ஆகும் வாய்ப்பை இவருக்கு கொடுத்தது. ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒரு ஹிந்தி பாடலை பாடினார். பின்னர் ஓகே கண்மணி படத்தில் பாடலைப் பாடினார். பின்னர் அனிருத் இவருக்கு பல படங்களில் பாடும் வாய்ப்பைக் கொடுத்தார். இறைவா, செல்லம்மா செல்லம்மா, அரபிக்குத்து போன்ற பாடல்கள் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது.

இவர் அரபிக் குத்து லிரிக் வீடியோவில் தோன்றி ஆடியதால் ரசிகர்கள் ஆதரவு பெருகியது. பாடகியாக கலக்கி வந்த ஜோனிதா காந்தி தற்போது ஹீரோயினாக களமிறங்கி இருக்கிறார். வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்ற படத்தில் ஜோனிதா காந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை விநாயக் என்பவர் இயக்கியிருக்கிறார். நயன்தாரா விக்னேஷ் சிவனின் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்