Categories: அரசியல்

பாஜக புதிய தலைவர்: நாட்டா போட்டியின்றி தேர்வு!

பாஜகவின் தேசிய தலைவராக அதன் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தேசிய தலைவராக தற்போதைய அமைச்சர் அமித் ஷா இயங்கி வந்தார்.

பாஜக புதிய தலைவர்: நாட்டா போட்டியின்றி தேர்வு! 1
ஜே.பி.நாட்டா

தற்போது நடைபெற்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.

அக்கட்சியின் விதிப்படி அமைச்சர் பதவியில் இருப்பவர்களுக்கு கட்சி பதவி வழங்கப்படாது. இந்த வகையில் தேசிய தலைவர் பதவியை இராஜினாமா செய்யவே, செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.

இதன் பிறகு இவரே தற்போது தேசிய தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 59 வயதாகும் நட்டா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

1993,98,2007 ஆகிய ஆண்டுகளில் ஹிமசால் பிரதேச மாநில சட்டசபைக்கு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். மாநில அளவில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்