பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டிருந்த ஜூலியின் தற்போதைய புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது. பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து அவர் தனது முகத்தை மாற்றிக் கொண்டுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக அறியப்பட்டவர் ஜூலி. இவர் ஆரம்பத்தில் நர்ஸாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார் .ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு இவரை “வீரத் தமிழச்சி” என்று அழைத்து வந்தனர். அந்த புகழைக் கொண்டே இவருக்கு பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் இவருக்கும் ஓவியாவுக்கும் நடந்த பிரச்சனையால் இவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. அதனால் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். வெளியேறிய பின்பும் இவர் மீது விமர்சனங்கள் குறையாமல் இருந்து வந்தது.

பின்னர் இவர் பிக்பாஸ் அல்டிமேட் இன்னும் 24 மணி நேரம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு சீசன் 1ல் நான் தெரியாமல் பல தவறுகள் செய்து விட்டேன், அதை சரி செய்யும் விதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் இங்கும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பின்னர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஜூலி சில சீரியல்களில் கமிட் ஆகி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். மேலும் அம்மன் என்கிற ஒரு படத்திலும் அம்மனாக நடித்தார். அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை.
இந்த நிலையில் இன்று காலை முதலே ஜூலியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து அவர் தனது முகத்தை மாற்றிக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜூலி தனது பழைய முகப்பொலிவை இழந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்கள் முகத்திற்கு என்ன ஆனது என்று கமெண்டில் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொள்கிறேன் என்ற பெயரில் பலரும் தங்கள் முக அழகை கெடுத்துக்கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது ஜூலியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.