விஜய் டிவியின் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் ஜூலி.! எந்த சீரியல் தெரியுமா?

வெளியிட்டது

பிக்பாஸ் மூலமாக பிரபலமான ஜூலி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இனி தொடர்ந்து அவரை அந்த சீரியலில் பார்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் ஜூலி. செவிலியராக பணிபுரிந்து வந்த இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் ஒன்றில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். இவருக்கும் ஓவியாவுக்கு நடந்த பிரச்சனைக்கு பின்னர் இவருக்கு மவுசு குறைய தொடங்கியது. பொது மக்களில் இருந்து ஒருவராக சென்ற இவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். பின்னர் தொடர்ந்து ஜூலிக்கு எங்கு சென்றாலும் எதிர்ப்பு நிலவி வந்தது. ஜூலி பேசத் தொடங்கினாலே ஓவியா ஓவியா என்று கூட்டத்திலிருந்து மக்கள் கத்த தொடங்கினர். அந்த அளவிற்கு எதிர்ப்புடன் வலம் வந்த ஜூலி தற்போது அனைத்தையும் மாற்றி இருக்கிறார். எதிர்ப்புகள் அனைத்தையும் வரவேற்புகளாக மாற்றி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் ஜூலி.! எந்த சீரியல் தெரியுமா? 1

பின்னர் ஜூலி பிக்பாஸ் அல்டிமேட் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. பின்னர் அம்மன் என்கிற ஒரு படத்திலும் நடித்திருக்கிறார் ஜூலி. எதிர்பார்த்த அளவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் நாடகங்களில் அவ்வப்போது என்ட்ரி கொடுத்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சில நாடகங்களிலும் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. தென்றல் வந்து என்னை தொடும் தொடர் முடியும் தருவாயில் இருந்தது. ஆனால் திடீரென அபி கலெக்டர் ஆனது போலவும் வெற்றி மிகப்பெரிய ரவுடியாக இருப்பது போலவும் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது இது சீசன் 2 போல எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த கதை ஆரம்பத்தில் வேறு மாதிரியாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது யூ டர்ன் அடித்து கதையை புதிய கதைகளத்துடன் மாற்றி இருக்கின்றனர். மேலும் இந்த படம் துள்ளாத மனமும் துள்ளும் படம் போல் இருப்பதாக ரசிகர்கள் விமர்சனமும் செய்து வந்தனர். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் ஜூலியின் என்ட்ரியுடன் வீடியோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்