Categories: சினிமா

அயோ இந்த நாய் குட்டி என்ன இவளோ சேட்டை பண்ணுது.! ஜோதிகா வெளியிட்ட Cute வீடியோ.!

வெளியிட்டது

நடிகை ஜோதிகா தனது மகள் தியாவுக்காக நாய் குட்டி ஒன்றை வாங்கி சமீபத்தில் பரிசளித்து இருந்தார். அந்த நாய் குட்டியுடன் செய்யும் சேட்டைகளை தற்போது வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார் ஜோதிகா. தமிழின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் 1998 ஆம் ஆண்டு ஹிந்தி படம் ஒன்றில் நடித்தார். 1999 ஆம் ஆண்டு வாலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் அடுத்த ஆண்டு பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி, குஷி, ரிதம் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். திருத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே விஜய் அஜித் சூர்யா விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். அதன் பின்னர் இவர் பூவெல்லாம் உன் வாசம், லிட்டில் ஜான் பிரியமான தோழி, காக்க காக்க, பேரழகன், மன்மதன், சில்லுனு ஒரு காதல், சந்திரமுகி, வேட்டையாடு விளையாடு போன்ற பல படங்களின் நடித்து முடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அயோ இந்த நாய் குட்டி என்ன இவளோ சேட்டை பண்ணுது.! ஜோதிகா வெளியிட்ட Cute வீடியோ.! 1

2007 ஆம் ஆண்டு மொழி படத்திற்கு பின்னர் அவர் நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டார். பின்னர் 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே என்கிற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்தன் மூலம் திரைத்துறைக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த நடித்து வருகிறார் ஜோதிகா. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ராட்சசி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்குப் பின்னர் இவர் உடன்பிறப்பே என்கிற படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி உடன் இணைந்து நடித்தார். தற்போது கைவசம் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்கிற படத்திலும், ஸ்ரீ என்கிற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய பல மொழிகளில் நடித்திருக்கிறார் ஜோதிகா.

ஜோதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவர் சூர்யாவை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தேவ் மற்றும் தியா என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். மகள் தியாவுக்காக நாய் குட்டி ஒன்றை வாங்கி சமீபத்தில் பரிசளித்து இருந்தார் ஜோதிகா. அந்த நாய் குட்டியுடன் செய்யும் சேட்டைகளை தற்போது வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. லைக்குகளும் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்