Categories: சினிமா

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்த ஜோதிகா.! வைரலாகும் வீடியோ.!

வெளியிட்டது

நடிகை ஜோதிகா ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தமிழின் முண்ணனி நடிகையும், நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா 1998 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். பின்னர் 1999 ஆம் ஆண்டு வாலி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடித்த படம் “உடன்பிறப்பே”. இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு மனைவியாகவும் சசிகுமாருக்கு தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருந்தார் ஜோதிகா. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களான 36 வயதினிலே, ராட்சசி போன்ற படங்களிலும் அவர் நடித்து உள்ளார்.

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்த ஜோதிகா.! வைரலாகும் வீடியோ.! 1

 

தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆக்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தனது கணவருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். 2d என்டேர்டைன்மென்ட் என்னும் அந்த நிறுவனத்தின் மூலமாக சில படங்களை தயாரித்து உள்ளனர். குறிப்பாக சூர்யாவின் தம்பி கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் படத்தை இந்த நிறுவனம்தான் தயாரித்து இருந்தது. சமீபத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் தேசிய விருது பெற்றிருந்தனர். சூரரைப் போற்றி திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கு,ம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜோதிகாவிற்கும் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் சூர்யா மற்றும் ஜோதிகாவின் வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருவது வழக்கம். தற்போது ஜோதிகா தனது கணவர் சூர்யா போலவே ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நேற்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார். இந்த பிறந்த நாளை வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்காக பரிசளிக்கிறேன். வயது என்னை மாற்ற அனுமதிக்க மாட்டேன், என் வயதை மாற்றுவேன் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.. Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்