விஜய் டிவியின் வேறு சீரியலில் என்ட்ரி கொடுத்த தென்றல் வந்து என்னை தொடும் வெற்றி.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் ஹீரோவாக இருக்கும் வெற்றி தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் தற்போது பரபரப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. சூர்யாவுக்கும் வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்கிற பரபரப்புடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் வேறு சீரியலில் என்ட்ரி கொடுத்த தென்றல் வந்து என்னை தொடும் வெற்றி.! 1

முழுக்க முழுக்க கல்லூரியையும் அங்கு நடக்கும் காதலையும் மையமாகி இந்த தொடர் ஒளிபரப்பானது. ஆரம்பத்தில் இது பலராலும் விமர்சிக்கப்பட்டது. பேராசிரியராக இருக்கும் சூர்யா படிக்க வந்த மாணவியை காதல் வலையில் வீழ்த்தி அவரை திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சிகள் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் கதைப்படி வெண்ணிலாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், அவர் தப்பித்து ஓடி வருகிறார். மறுபுறம் சூர்யாவிற்கும் ஷிவானிக்கும் திருமணம் நடைபெறுகிறது.

தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் வெற்றி இந்த நாடகத்தில் திடீர் என்ட்ரி கொடுத்து வெண்ணிலாவை காப்பாற்றி திருமண மண்டபத்திற்கு அழைத்து வருகிறார். மண்டபத்திற்கு வந்த வெண்ணிலா கல்யாணத்தை நிறுத்துமாறு கத்துகிறார். இதனால் சூர்யாவின் தாய், தந்தை உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். வெற்றியின் இந்த திடீர் என்ட்ரி தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்