விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ்.! முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்.! சீக்கிரம் கிளைமாக்ஸ்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் தொடங்க இருப்பதால் பல சீரியல்களை முடிவுக்கு கொண்டு வர விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி காற்றுக்கென்ன வேலி சீரியல் முதல் ஆளாக விஜய் டிவியிலிருந்து விடை பெற இருக்கிறது் விரைவில் இதன் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி வெளியானது தொடங்கி ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது தான் காற்றுக்கென்ன வேலி சீரியல் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், அது முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாக இருப்பது ரசிகர்களுடைய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ்.! முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்.! சீக்கிரம் கிளைமாக்ஸ்.! 1

காற்றுக்கென்ன வேலி சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் சுமார் இரண்டு மேல் ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் சுவாமிநாதனும் பிரியங்கா குமார், வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் சூர்யாவிற்கு தனது கல்லூரியில் படிக்கும் வெண்ணிலா மீது காதல் வருகிறது. இந்த காதல் தற்போது திருமணம் வரை சென்றிருக்கிறது. இதற்கிடையில் அவர்கள் இருவரும் சந்தித்த பிரச்சனைகள் என்ன? தடைகளை மீறி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? என்கிற கதையுடன் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

இந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இப்போது தான் கதை சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. இதற்கிடையில் பிக்பாஸ் தொடங்க இருப்பதால் இந்த கதை விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஷூட்டிங்கின் கடைசி கால அட்டவணை போடப்பட்டு விட்டதாகவும, விரைவில் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்த சீரியலின் ஹீரோவாக இருக்கும் சுவாமிநாதன் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் “நீ நான் காதல்” என்கிற சீரியலில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. காற்றுக்கென்ன வேலி முடிவடைய இருக்கும் சோகம் ஒரு புறம் இருந்தாலும், சுவாமிநாதனின் புதிய சீரியலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்