கதை இல்லாமல் திணறும் சீரியல்.! எண்டு கார்டு போட்டு இழுத்து மூட உள்ள விஜய் டிவி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலும் விரைவில் முடிவடைய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாரதி கண்ணம்மா சீரியல் ஆகஸ்டு ஏழாம் தேதி உடன் முடிவடைய இருக்கும் நிலையில் அடுத்த தொடராக தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலும் நிறைவடைய இருக்கின்றது. பிக் பாஸ் சீசன் 7 துவங்க இருப்பதாலும் மேலும் பல புதிய சீரியல் வர இருப்பதாலும் விரைவில் பல நாடகங்களை முடிக்க விஜய் தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் முதலில் டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய அடி வாங்கிய பாரதி கண்ணம்மா சீசன் 2வை முடிக்க நாடகக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.்இன்னும் ஏழு நாட்களில் இந்த நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் கதாநாயகி என்கிற புது ரியாலிட்டி ஷோவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

கதை இல்லாமல் திணறும் சீரியல்.! எண்டு கார்டு போட்டு இழுத்து மூட உள்ள விஜய் டிவி.! 1

இதனால் பிக் பாஸ் மற்றும் புது சீரியல்களின் வரவிற்கு எப்படி நேரம் ஒதுக்கப்படும் என்று பலரும் குழம்பிப் போயிருந்த நிலையில் தற்போது கிழக்கு வாசல் சீரியல் பாரதி கண்ணம்மா ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த 10 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக இன்று அதிகாரப்பூர்வ ப்ரோமோ வெளியானது. இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருவது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்ட நிலையில், தற்போது அடுத்த சீரியலாக காற்றுக்கென்ன வேலி சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது. காற்றுக்கென்ன வேலி சீரியலும் கதை இல்லாமல் பல நாட்களாக காருக்குள் அமர்ந்து கொண்டு இருப்பது போன்று காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த சோர்வில் இருந்து வருகின்றனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த கதைக்களம் தற்போது ஒரே இடத்திலேயே தேங்கி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

மேலும் காற்றுக்கென்ன சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சுவாமி நாதனுக்கு அதே சீரியலில் வேறு ஒரு நாடகத்தின் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. நுவ்வு நேனு பிரேமா என்கிற தெலுங்கு சீரியலின் ரீமேக் தற்போது தமிழில் எடுக்கப்பட இருக்கிறது. மறைந்த இயக்குனர் தாய் செல்வம் பெயரில் தொடங்கப்பட்டுள்ள தாய் ப்ரொடக்ஷன் சார்பில் இந்த சீரியல் தயாரிக்கப்பட இருப்பதாகவும், ஸ்டார் பிளஸில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் தமிழ் ரீமேக்கில் தற்போது சுவாமிநாதன் நடிக்க இருக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதனால் காற்றுக்கென்ன வேலி சீரியலும் இன்னும் சில நாட்களில் முடிந்து அடுத்தடுத்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னைத் தொடும், பாரதிகண்ணம்மா 2, முத்தழகு போன்ற பல சீரியல்கள் முடிவடைய இருப்பதாக இணையத்தில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவிக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலும் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சீரியல் குழுவினரே விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்