Categories: சினிமா

சர்வதேச அரங்கில் கௌரவிக்கப்பட்ட ‘கடைசி விவசாயி’. டாப் 25 படங்களில் தரவரிசையில் 2வது இடம்.!

வெளியிட்டது

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான “கடைசி விவசாயி” திரைப்படம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. 2022ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியான உலக படங்களை தரவரிசைப்படுத்தும் இணையதளகான letterboxed இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 30 ஜூன் 2022 வரை முதல் 6 மாதங்களில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியான படங்களில் சிறந்த 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு மக்கள் கொடுத்த ரேட்டிங் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 1000 புள்ளிகள் ரேட்டிங் பெற்றிருக்க வேண்டும். இந்த வரிசையில் ஆவணப்படங்களும், நான் ஃபிக்சிங் உள்ளிட்ட படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச அரங்கில் கௌரவிக்கப்பட்ட 'கடைசி விவசாயி'. டாப் 25 படங்களில் தரவரிசையில் 2வது இடம்.! 1

 

Everything Everywhere all at once என்ற சீன மொழி படம் 4.5 ரேட்டிங்கை பெற்று முதல் இடத்தையும், 4.3 ரேட்டிங் பெற்று கடைசி விவசாயி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கடைசி விவசாயி படம் இடம் பெற்றுள்ளது. மலைகிராமத்தில் வசித்து வரும் ஒரு ஏழை விவசாயி, விவசாயம் அழிந்துவிட கூடாது என்பதற்காக பயிர்களையும், நிலங்களையும் காப்பாற்ற நினைக்கும் உணர்வுப்பூர்வமான திரைப்படம். விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது.

ஆனாலும் திரையில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் சர்வதேச அங்கீகராம் கிடைத்துள்ளது. மார்ச் மாதம் வெளியாகி 1000 கோடிகளுக்கு மேல் வசுலை குவித்து இருந்த ஆர்ஆர்ஆர் படம் 6வது இடத்தையும், உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாகி 30 நாட்களை கடந்தும் இன்றும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் படம் 11வது இடத்தையும் பெற்றுள்ளது. மலையாள படமான “படா” 21வது இடத்தையும் பிடித்துள்ளது.

1000 கோடி வசூலை குவித்த ஆர்ஆர்ஆர் படத்தையும், 500 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் விக்ரம் படத்தையும் பின்னுக்குத் தள்ளி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கடைசி விவசாயி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் தர வரிசையில் முதல் 25 இடங்களில் கடைசி விவசாயி, ஆர்ஆர்ஆர், விக்ரம், படா போன்ற 4 இந்திய திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Thanthi Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்