தமிழ் நடிகர் பரத் மற்றும் சந்தியா இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் ‘காதல்’ என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. எஸ்.ஷங்கரால் தயாரிக்கப்பட்ட ‘காதல்’ படத்தை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். 2004 இல் வெளிவந்த இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் பரத் மற்றும் சந்தியா இருவரும் அவரவர்கள் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளனர். இருப்பினும் இப்படத்தின் கதாநாயகியாக முதலில் தேர்வானவர் வேறு நடிகை என்பது நம்மில்

பலருக்கு தெரியாத செய்தி. இப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான் “சரண்யா நாக்”. இவரும் இந்த படத்தின் மூலமாகத் தான் பிரபலமானார். இவர் ‘காதல் கவிதை’, ‘நீ வருவாய் என’ போன்ற தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். பிறகு காதல் படத்தில் துணை வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். பின்பு ஜெயம் ரவியின் ‘பேராண்மை’ படத்தில்
“அஜிதா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் சற்று பிரபலமானார். மேலும் பல படங்களில் துணை வேடங்களிலே நடித்து வந்தார். இவரைத் தான் இயக்குனர் பாலாஜி தமது ‘காதல்’ படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்ய எண்ணினார். ஆனால் அவர் சிறிய பெண்ணாக இருந்ததால் அந்தக் கதாபாத்திரத்திற்கு சந்தியாவைத் தேர்ந்தெடுத்தார். ஆகையால் சரண்யாவை தோழியாக நடிக்க வைத்தார்.