Categories: சினிமா

காதலர் தினம் சோனாலியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருகாங்கன்னு பாருங்க.!

வெளியிட்டது

பிப்ரவரி 14 காதலர் தினம் வந்தாலே அனைத்து டிவிகளிலும் ஓடும் ஒரு படமாக இருந்தது காதலர் தினம். இந்த படம் 1999 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் குணால், சோனாலி கவுண்டமணி, நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் வந்த ஒவ்வொரு பாடலும் இன்று வரை கேட்கும்போதுவருக்கும் மெய்சிலிர்க்க வைக்கும். காதலெனும் தேர்வெழுதி பாடலும், என்ன விலை அழகே பாடலும், தாண்டியா ஆட்டமும் பாடலும் இன்றும் அனைவரையும் மனத்திலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. இந்தப் படத்தில் குணாலும், சோனாலயும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். இந்த படத்தில் வரும் சோனாலி தற்போது புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் முடிகளை இழந்து மொட்டை தலையுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்கடித்து வருகிறது.

காதலர் தினம் சோனாலியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருகாங்கன்னு பாருங்க.! 1

சோனாலிக்கும், பிரபல தயாரிப்பாளரான கோல்டி பில்லுக்கும் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவருக்கு 2005 ஆம் ஆண்டு ஒரு குழந்தை பிறக்கவே சினிமாவிற்கு முழுதாக முழுக்கு போட்டுவிட்டு சென்றார். பின்னர் அவ்வபோது நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பங்கெடுத்து வந்தார் சோனாலி. நாற்பத்தி ஆறு வயதாகும் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் ஹீமோதெரபி சிகிச்சைக்காக தன் தலையை மொட்டை அடித்திருந்தார். சிகிச்சைக்கு பின்னர் தன் தலையில் விக்வைத்துக் கொண்டு புதிய இடங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு கீழே அழகாக இருக்க யாருக்கு தான் ஆசை இல்லை? தோற்றம் அழகாக இருப்பது முக்கியம், அது ஆழ்ந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும், நம் தோற்றம் பற்றிய கர்வம் இருப்பது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மருத்துவர்கள் மார்பு நோய் மார்பக புற்றுநோய் இருப்பதால் பிழைப்பதற்கு 30 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக தன்னிடம் கூறியது தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும், தனது குடும்பத்தினரை அனைவரையும் இந்த விஷயம் சோகமடைய செய்தது என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும் நியூயார்க்கில் உள்ள ஒரு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். 2018 ஆம் ஆண்டு முதல் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட வரும் சோனாலி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விழிப்புணர்வு செய்திகளை பகிர்ந்து வருகிறார். தன்னைப்போல பிற பெண்களும் கஷ்டப்படக் கூடாது என்று புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அவர் தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்