நடிகர் ஆர்யா நடித்துள்ள காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான “தவுலத்தான ரவுடி” என்கிற பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையில் தரமான குத்துப்பாட்டாக இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. கருப்பு நிற வேட்டி சட்டையில் வேட்டியை மடித்துக் கொண்டு இறங்கி குத்தாட்டம் போட்டு இருக்கிறார் ஆர்யா. இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த பாடலை நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் கோரியோகிராப் செய்திருக்கிறார். 2005 ஆம் ஆண்டு வெளியான “அறிந்தும் அறியாமலும்” என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. பின்னர் கலாபக் காதலன், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, அவன் இவன், நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் ஆர்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வசந்த முல்லை. எதிர்பார்த்த அளவிற்க்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. தற்போது கிராமத்து கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் ஆர்யா. அந்த வகையில் இயக்குனர் முத்தையாவுடன் இணைந்து தற்போது இவர் நடித்திருக்கும் திரைப்படம் தான் காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம். இந்த படத்தை ஜி ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம் ஸ்டிக்ஸ் ப்ரோடக்ஷன் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. விருமன் படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தை இயக்கி வருகிறார் முத்தையா. இந்த படத்தில் சித்தி இதானி கதாநாயகியாக நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். படப்பிடிப்பு கடந்த வருடம் அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகியிருந்தது. நாற்காலியில் கருப்பு நிற உடையுடன் ஆர்யா அமர்ந்திருக்க, பின்னால் ரஜினியின் பாட்ஷா புகைப்படமும் வரையப்பட்டிருந்தது.
ஆர்யாவின் தோற்றத்தையும் டீசரையும் பார்க்கும் பொழுது இது பக்கா கிராமத்து கதை அம்சம் கொண்ட மசாலா திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. சமீபத்தில் “தவுலத்தான ரவுடி” என்கிற பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பாடலின் முழு லிரிக் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Junglee Music Tamil