Categories: சினிமா

காமெடி கலந்த த்ரில்லரில் கலக்கி இருக்கும் காஜல் அகர்வால் & யோகிபாபு.! Ghosty ட்ரைலர் இதோ.!

வெளியிட்டது

காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் கோஸ்டி திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. மும்பையில் பிறந்து வளர்ந்த காஜல் அகர்வால் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் காஜல். ஆனால் இவரது படங்கள் பெரிய அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் இவர் நடித்த மகதீரா படம் 2009 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காமெடி கலந்த த்ரில்லரில் கலக்கி இருக்கும் காஜல் அகர்வால் & யோகிபாபு.! Ghosty ட்ரைலர் இதோ.! 1

திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்தில் விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து முடித்து இருக்கிறார். இவர் தற்போது இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் தான் கோஸ்டி. குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை சீட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், ரெட்டிங் கிங்க்ஸ்லி, ஆடுகளம் நரேன், மயில்சாமி, ராதிகா, ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. ஓடிடியில் ரிலீஸ் ஆனால் ஓட்டி ஓட்டி பார்க்கலாம் என்று பார்க்கிறாயா?

தியேட்டர்ல தான் ரிலீஸ் ஆகும் என்று யோகி பாபு வசனம் கவனம் பெற்று இருந்தது. இந்த படம் வருகிற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் காஜல் அகர்வால். அவர் தெரியாமல் ஒரு நபரை சுட்டு விடுகிறார். பின்னர் இறந்து போன அவரின் பேய் இவரை வந்து பழி வாங்குவது போல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. காமெடி கலந்த திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ட்ரைலர் வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்