இந்த சைக்கோ முட்டாள் ஜெயிக்கவே மாட்டான்.! அசீம் பற்றி காட்டமாக பதிவிட்ட காஜல் பசுபதி.!

வெளியிட்டது

அசீம் போன்ற சைக்கோவை ஜெயிக்க வைத்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதனால் அவர் ஜெயிக்க வைக்க வாய்ப்பில்ல என்று சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி தற்போது தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஆரம்பம் முதலே சர்ச்சையான போட்டியாளராக இருந்து வருபவர் அசீம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற பல நாடகங்களில் நடித்திருக்கிறார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக போன்ற சீரியல்களிலும் அவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். அசீம் வெளியில் இருந்த போதே அவர் மீது பல குற்றச்சாட்டுகளை சக நடிகர்கள் வைத்து வந்தனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை ஏதாவது சொல்லிவிட்டால் சண்டை சச்சரவு என்று அவர் அந்த ஷூட்டிங்கையே கெடுத்து விடுவார் என்று தொடர்ந்து அவருடன் நடித்த நடிகர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்த சைக்கோ முட்டாள் ஜெயிக்கவே மாட்டான்.! அசீம் பற்றி காட்டமாக பதிவிட்ட காஜல் பசுபதி.! 1
இந்த நிலையில் பிக்பாஸ்க்குள் சென்ற அவர் தொடர்ந்து ஆரம்பம் முதலே ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி வருகிறார். முதலில் ஆயிஷாவை வாடி போடி என்று சண்டையை தொடங்கியவர், பின்பு அமுதவாணனை ஒருமையில் பேசினார். நீ விஜய் டிவி ஆள் என்றால் அங்கு போய் வைத்துக்கொள் இங்கு உன் பாச்சா பலிக்காது என்று அவரையும் திட்டி தீர்த்தார். பின்னர் விக்ரமன் சோற்றில் எச்சில் துப்பி தருவேன் அதை தின்னு என்று பேசினார். பின்னர் மீண்டும் அமுதவாணனுடன் சண்டை ஏற்பட்டபோது உனக்கு உண்மையிலேயே நெஞ்சு உரம் இருந்தால் என்னை அடிடா என்று மிகவும் மோசமாக சண்டை போடும் அளவிற்கு சென்றார். இந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் நடந்த ரேங்கிங் டாக்கில் விக்ரமனை கட்டப்பஞ்சாயத்து செய்கிறாயா? உனக்கு அது பழக்கமாகிவிட்டதா என்று பேசினார். தொடர்ந்து இது போல் பேசி வரும் அசீமை வார இறுதி நாட்களில் கமல் கண்டிப்பதும், கமல் எபிசோடில் மட்டும் தலையை தலையை ஆட்டிவிட்டு மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியது போல வார நாட்களில் அசீம் சண்டை போடுவதும் வழக்கமாகி வருகிறது.


அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று பலரும் கமலஹாசனை வலியுறுத்தும் நிலையில், கமல் அந்த வேலையை செய்வதே இல்லை. எனவே கமல் மீதும் சிலர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். கமல் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்றும் டிஆர்பி மற்றும் கன்டென்ட்காக இதுபோன்ற ஆட்களை இன்னும் உள்ளே வைத்திருக்கிறார் என்றும் அவருக்கு சிலர் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் சிலரோ கமல் வார இறுதி நாட்களில் அசீமை திட்டுவது விக்ரமனை சந்தோஷப்படுத்துவதற்காகவே, விக்ரமன் ஒரு அரசியல்வாதி என்பதால் கமல் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று கமல் மீது சில அசீம் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அசீமுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வரும் நிலையில், சாண்டியின் முன்னாள் மனைவியும், நடிகையுமான காஜல் பசுபதி தற்போது காட்டமான பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார். அவரது பதிவிற்கு கீழே மோசமான வார்த்தைகளில் அவரை திட்டி வருகின்றனர்.

அதில் அசீமின் புகைப்படங்களை பதிவிட்ட காஜல் “உனக்கு எல்லாம் ஜெயிக்க வாய்ப்பில்லை தம்பி, ஏனென்றால் உன்னை போன்ற சைக்கோ முட்டாள்களை எல்லாம் ஜெயிக்க வைத்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்” என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு கீழே அசீமின் ரசிகர்கள் சென்று மோசமான வார்த்தைகளில் கமென்ட் செய்து வருகின்றனர். அவர்களுக்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் காஜல். காஜல் பசுபதி ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1ல் வைல்ட் கார்டு என்ட்ரியாக பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்