தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய அசீம் ரசிகர்களுக்கு தற்போது காஜல் தனது பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார். அதான உன் புருஷன் உன்னை விட்டுட்டு போயிட்டானாடி என்று அசீமின் ரசிகர்கள் காஜல் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த, தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஜல் ஒரு பதிவை போட்டு இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் பிடித்திருக்கிறது பிக்பாஸ் இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் டைட்டில் வின்னர் ஆக நடிகர் அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. பெண்களையும், திருநங்கைகளையும் கமலையுமே மதிக்காத ஒருவருக்கு எப்படி டைட்டில் கொடுத்தார்கள் என்று பலரும் இணையத்தில் விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் பிக்பாஸ் பற்றி தொடர்ந்து தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் போட்டு வருகிறார் காஜல் பசுபதி. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு டைட்டில் வின்னர் இவ்வளவு நெகட்டிவ் விஷயங்களை சம்பாதித்து இருப்பது அசீம் மட்டுமே. அசீமுடன் நடித்த நடிகைகள் தொடங்கி பல நடிகர் நடிகைகளும் அவருக்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தனர். பிக்பாஸில் இருக்கும் போது நான் வெளியில் இப்படி கிடையாது என்று தொடர்ந்து கூறி வந்தார் அசீம். ஆனால் வெளியில் அவருடன் சீரியலில் நடித்த நடிகைகள் பலரும் இவர் வெளியில் இதற்கு மேல் இருப்பார், ஒருமுறை இவர் சீரியல் நடிகை ஒருவரை தகாத வார்த்தைகளில் திட்டியதால் அந்த நடிகை கோபித்துக் கொண்டு அழுகையுடன் அந்த சீரியலை விட்டு விலகி விட்டார் என்றெல்லாம் அசீம் உடன் நடித்த சக நடிகைகள் பேட்டி கொடுத்திருந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் பற்றிய தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் காஜல் பசுபதி சமீபத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.
அந்தப் பதிவுக்கு கீழே அசீமின் ஆதரவாளர்கள் சிலர் அப்யூசர் அசீம் என்று போட்டால், அதான் உன் புருஷன் உன்னை விட்டு போய்விட்டானடி டேஷ் என்று சிரிக்கின்றனர்.அவர்களுக்கு நான் ஒன்று கேட்கிறேன். அடேய், காப்பி பேஸ்ட் செய்யும் பூமர்ஸ், சரி இப்போ சொல்லு நாயே, எதுக்கு மக்கள் நாயகன் அசீமை அவன் பொண்டாட்டி விட்டுட்டு போயிட்டா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்போது காஜலின் இந்த பதிவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்து காஜல், அசீம் செய்யும் ஒவ்வொரு தவறுகளையும் தொடர்ந்து எதிர்த்து கேள்வி கேட்டு வருகிறார். ஏற்கனவே அவர் அசீமை சைக்கோ போல் நடந்து கொள்ளும் இவர் டைட்டில் ஜெயிக்க முடியாது என்று விமர்சித்திருந்தார். காஜலும் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரும் முன்னாள் கணவன் மனைவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.